தமிழர்களுக்காக தீயில் கருகிய செங்கொடியின் மரணத்திற்கு இன்னும் விடை காணாத தமிழர் தேசம்!

தமிழர்களுக்காக தீயில் கருகிய செங்கொடியின் மரணத்திற்கு இன்னும் விடை காணாத தமிழர் தேசம்!

தமிழர்களுக்காக தீயில் கருகிய செங்கொடியின் மரணத்திற்கு இன்னும் விடை காணாத தமிழர் தேசம்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, காஞ்சீபுரத்தில் செங்கொடி (வயது 21) என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்ட கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 2011 செப்டம்பர் 9-ம் தேதி என தூக்கிலிடுவதற்கான நாளும் குறிக்கப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்தத் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு கட்சிகளாலும், அமைப்புகளாலும் போராட்டம் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், மூவரின் உயிர் காக்கக் கோரி இளம் பெண் ஒருவர் தனதுயிரை தீயிட்டு மாய்த்துக் கொண்டது, தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். இவருடய மகள் செங்கொடி, காஞ்சிபுரம் ‘மக்கள் மன்றம்’ என்ற அமைப்பில் இணைந்து பல்வேறு சமூகப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், காஞ்சீபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மக்கள் மன்றம் அமைப்பின் சார்பில் அவர் பங்கேற்றார். இதன் தொடர்ச்சியாக, அன்று மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் வந்தார். ஒரு கைப்பையுடன் வந்த செங்கொடி, அதில் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை வெளியே எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியுற்ற அப்பகுதி மக்கள், ஓடி வந்து உடனடியாக தீயை அணைத்தனர்; 108 ஆம்புலன்சுக்கும் (இலவச அவசர சிகிச்சை ஊர்தி) தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை மீட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட செங்கொடியின் கைப்பையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில்,

தமிழர்களுக்காக தீயில் கருகிய செங்கொடியின் மரணத்திற்கு இன்னும் விடை காணாத தமிழர் தேசம்!

தமிழர்களுக்காக தீயில் கருகிய செங்கொடியின் மரணத்திற்கு இன்னும் விடை காணாத தமிழர் தேசம்!

தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.

– இப்படிக்கு தோழர் செங்கொடி

இவ்வாறு அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆகத்து 31, 2011 அன்று செங்கொடியின் நினைவைப் போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: