கீழடி, அழகன்குளம் அகழாய்வை அடுத்து பட்டரைபெரும்புதுாரில் பண்டைய தமிழர் நாகரீகமா?

கீழடி, அழகன்குளம் அகழாய்வை அடுத்து பட்டரைபெரும்புதுாரில் பண்டைய தமிழர் நாகரீகமா?

கீழடி, அழகன்குளம் அகழாய்வை அடுத்து பட்டரைபெரும்புதுாரில் பண்டைய தமிழர் நாகரீகமா?

ராமநாதபுரம் மாவட்டத்தின் அருகே அழகன்குளத்தில் அகழாய்வு செய்து வரும் தொல்லியல் துறையினர், அடுத்தகட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டரைபெரும்புதுார் பகுதியில் அகழாய்வு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மதுரை அருகே கீழடி பகுதியில் தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில், சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய அரிய பொருட்கள் கிடைத்தன. அவற்றை தொல்லியல் துறையினர் ஆவணப்படுத்தியுள்ளனர். இதேபோல் தற்போது ராமநாதபுரம் பகுதியில் உள்ள அழகன்குளத்தில், 55 லட்சம் ரூபாய் மதிப்பில் தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அழகன்குளத்தில் இப்பொழுது நடந்து வரும் அகழாய்வில் சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய பாசி, மணி, வளையல்கள், ஆபரணங்கள், நாணயங்கள், இரும்பு பொருட்கள், மண் பாண்டங்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இவைகளை ஆவணப்படுத்தும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு நடக்கும் அகழாய்வு ஆகஸ்டு, மாதத்தில் நிறைவு பெற்றாலும், கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்துவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என சொல்லப்படுகிறது. 2017, டிச., வரை அழகன்குளம் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடக்கும் என அழகன்குளம் அகழாய்வு மைய இயக்குனர் பாஸ்கர் தெரிவித்து மேலும் அவர் பட்டரை பெரும்புதூர் குறித்து கூறுகையில் :

தொல்லியல் துறை, பல்வேறு கட்டங்களாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மதுரை, கீழடியை விட அழகன்குளம் அகழாய்வு பணியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்துள்ளன.

இதனை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், பட்டரை பெரும்புதுார் பகுதியில் அடுத்த கட்ட அகழாய்வு நடக்கவுள்ளது. 2018 மார்ச், ஏப்ரல் மாதத்தில் இந்த அகழாய்வுப் பணி 20 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கவுள்ளது என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: