பறிபோன தமிழகத்திற்குச் சொந்தமான செங்கோட்டை காடு!

பறிபோன தமிழகத்திற்குச் சொந்தமான செங்கோட்டை காடு!

பறிபோன தமிழகத்திற்குச் சொந்தமான செங்கோட்டை காடு!

மொழிவாரி மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்ட போது இரு மாநிலங்களுக்கு இடையே இயற்கையான எல்லையாக அமைந்துள்ள காடுகளைப் பங்கிடுவதில் சிக்கல் வந்தது.

அப்போது வகுத்த விதிப்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 30% காடுகளாக இருக்க வேண்டும் ஆனால் இதிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.

தமிழகத்தின் மேற்கும் வடக்கும் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த இயற்கையான எல்லையைத் தாண்டி மறுபக்கமும் தமிழர் வாழ்ந்தனர். அவை பறிபோனதுடன் காடுகளையும் கூட தமிழகத்துக்கு தராமல் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இதில் கேரளா அளவுக்கதிகமான காடுகளை எடுத்துக் கொண்டது. (அப்போது கேரளாவில் பாதிக்கு மேல் காடாக இருக்க, தமிழகத்தில் கால் பங்கு கூட காடு இல்லை)


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


பறி கொடுத்த வரலாற்றில் சிறந்த எடுத்துக்காட்டு செங்கோட்டை தாலுகாவில் இருந்த (ஆரியங்காவு மற்றும் குளத்துப்புழா இருக்கும்) செங்குறிஞ்சி, பொன்முடி காடுகள் பறிபோனது ஆகும்.

1931 மக்கட்தொகை கணக்கெடுப்பு செங்கோட்டை தாலுகா 100% தமிழர் வாழ்ந்த பகுதியாகும்.

அன்றைய மலையாள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க நேசமணி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக பாதியளவே கிடைத்தது.

இதில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டையும் அடங்கும்.

மீட்ட பகுதிகளை ஒரே மாவட்டமாக்கும்போது நேசமணியார் செங்கோட்டையை கன்னியாகுமரியின் ஒரு பகுதியாக வைத்திருப்பது மக்களுக்கு இடைஞ்சல் என்று அதை திருநெல்வேலிக்கே கொடுத்தார். இழந்த செங்கோட்டை வனப்பகுதிகள் 1950களிலேயே ஆண்டுக்கு 5 கோடி வருமானம் கொடுத்த வளமான பகுதியாக இருந்ததை மறக்கலாகாது.

நன்றி – vaet toli 

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதிகள்!... தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதிகள்! நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதியின் அளவு சு...
கேரள எல்லையில் அமைந்துள்ள தமிழ் கடவுளான கண்ணகி கோவ... கேரள மாநில எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் நேற்று (10.05.2017) நடைபெற்ற சித்ரா பவுர்ணமி விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர். ஒன்றுபட்ட ...
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை..... இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவ...
அகத்தியமலை (பொதிகைமலை) தமிழ் மலை அதிசயங்கள்!... அகத்தியமலை (பொதிகைமலை) தமிழ் மலை அதிசயங்கள்! அகத்தியமலை அல்லது அகத்தியக் கூடம் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை முடியாகும். இம்மலை நெய...
Tags: 
%d bloggers like this: