நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே 2 சதிக்கற்கள் கண்டுபிடிப்பு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே 2 சதிக்கற்கள் கண்டுபிடிப்பு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே 2 சதிக்கற்கள் கண்டுபிடிப்பு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான சங்கரநாராயணன் சேரன்மாதேவியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு 2 சதிக்கற்களும், தர்மச்சந்தை மற்றும் கிணறு வெட்டியதற்கான கல்வெட்டும் இருப்பதை அவர் கண்டுபிடித்து உள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


கணவன் இறந்தவுடன் அவனை எரிப்பதற்காக மூட்டப்படும் தீயில் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்ளும் பெண்களுக்காக எடுக்கப்பட்ட நினைவுக்கல்லே சதிக்கல் என்று அழைக்கப்படுகிறது. சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியையொட்டி அமைந்துள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் ஆணும், பெண்ணும் அமர்ந்த நிலையில் பொறிக்கப்பட்டு உள்ளனர். ஆண் உருவம் வலதுபுறமும், பெண் உருவம் இடதுபுறமும் காட்டப்பட்டு உள்ளன. ஆண் உருவம் வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடித்தும், பெண் உருவம் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டும் காணப்படுகிறது. ஆண், பெண் உருவங்களுக்கு நடுவில் மேற்பகுதியில் உடன்கட்டை ஏறிய பெண்ணும், அவளது கணவனும் மேல் உலகம் செல்லும் காட்சியும் செதுக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் நெல்லை-பாபநாசம் நெடுஞ்சாலையில் சேரன்மாதேவியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்கு கிழக்குப்பகுதியில் சாலையின் வடபுறத்தில் உள்ள ஒரு சிறிய மண்மேட்டின் மீது 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றையொட்டி ஒரு கல்வெட்டு உள்ளது. அந்த கல்வெட்டு, மதற்கான் அலிஜி என்பவர் தர்மச்சந்தை ஒன்றை கி.பி. 1843-ம் ஆண்டு வைகாசி மாதம் 15-ந் தேதி ஏற்படுத்தினார். அதன்பிறகு கி.பி. 1860-ம் ஆண்டு ஆடி மாதம் கிணறு ஒன்றையும் வெட்டி முடித்தார் என்று தெரிவிக்கிறது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண... ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு! சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கேளையூர் கிராமத்தில், தொல்குடிகளி...
18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிர் கல்வெட்டு திண்டு... 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு! தமிழ் எழுத்து, எண் உருக்களை உருவாக்கும், 18-ம் நுாற்றாண்டின் புதிர் கல்...
1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்க... 1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்! திருச்சிக்கு அருகில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலிங்குப் பாலம் ஒன்று, ...
ஏற்காடு அருகே 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆநிரைகளைக... ஏற்காடு அருகே 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆநிரைகளைக் காத்த வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு! சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே ஓலக்கோடு என்ற இடத்தில் 7 ம் நூற...
Tags: