முனிவர் தவம் செய்வதுபோல நடுகல் கண்டுபிடிப்பு!

முனிவர் தவம் செய்வதுபோல நடுகல் கண்டுபிடிப்பு!

முனிவர் தவம் செய்வதுபோல நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மாசிநாயகன பள்ளியில் ஒரு விவசாய நிலத்தில் முனிவர் தவம் செய்வது போன்ற நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அறம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் ஜெகன்நாதன், பிரியன், மஞ்சுநாத், சீனிவாசன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்ட போது இந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இந்த புது வகையான நடுகல் ஏனைய நடுகல் போல் அன்றி முற்றிலும் மாறுபட்டுள்ளது.

முனிவர் ஒருவர் ஆடை, அணிகலன் ஏதுமின்றி அமர்ந்த நிலையில் இரு கால்களையும் மடித்து, கைகள் இரண்டும் வணங்கிய நிலையில் தியானம் செய்வது போல் நடுகல் உள்ளது. இந்தக் கல்சிற்ப நுணுக்கத்தைக் காணும் போது 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கீழே சரிந்து விழும் நிலையில் உள்ள இந்த நடுகல் விரைவில் சீரமைக்கப்படும். இத்தகவலை அறம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: