ராஜராஜன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ராஜராஜன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ராஜராஜன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ராஜராஜன் காலத்து, கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்கலை கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜவேல், வரலாற்று மைய பேராசிரியர் சேகர் ஆகியோர் திருவண்ணாமலை அருகே, பொறையூர் கிராமத்தில், அரசமரத்தடியில் மேடை அமைத்து, பழங்கால கல்வெட்டை முனிஸ்வர சுவாமியாக வழிபட்டு வந்ததை கண்டறிந்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கல்வெட்டை ஆய்வு செய்ததில், முதலாம் ராஜராஜன், 24வது ஆட்சி, 1,009ம் ஆண்டு அமைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து, நீர் பாசனத்துக்கு தண்ணீரை வெளியேற்றும் மடை ஒன்றை, உத்தம நல்லூரை சேர்ந்த, கொற்றநங்கி என்பவர் அமைத்து கொடுத்ததும், அவர் பராமரிப்பில் இருந்துள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் ஏரி வற்றியதால், கல்வெட்டை குல தெய்வமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த பகுதி, அக்காலத்தில், ராஜராஜ பிரம்ம மங்கலம் என அழைக்கப்பட்டது. மேலும், ஏரிகளை பராமரிப்பு செய்வதற்கென்றே, ஏரி வாரியம் அமைத்து, ஆண்டுதோறும் ஆழப்படுத்தி, மழை நீரை தேக்கி வைத்து, பராமரிப்பு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தூண் கல்வெட்டு கண்டு... ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு! போச்சம்பள்ளி அருகே, ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, கன்னட தூண் கல்வெட்டை, வரலாற்றுத்துறை ...
உத்திரமேரூரில் பலி வீரன் நவகண்டம் சிலை கண்டுபிடிப்... உத்திரமேரூரில் பலி வீரன் நவகண்டம் சிலை கண்டுபிடிப்பு! உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில், தன் தலையை தானே அறுத்து காணிக்கைக் கொடுக்கும், சோழர் கா...
பாலப்பட்டு கிராமத்தில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்ப... பாலப்பட்டு கிராமத்தில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு! விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் பாலப்பட்டு கிராமத்தில் செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணர்வ...
ராமநாதபுரம் அருகே பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்... ராமநாதபுரம் அருகே பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்டுபிடிப்பு! ராமநாதபுரம் அருகே சேதுபதி கால கோட்டைப் பகுதியினுள் பாண்டியர் கால கோட்டை இருப்பது கண்டற...
Tags: 
%d bloggers like this: