வண்டலூர் அருகே ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு: தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு!

வண்டலூர் அருகே ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு: தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு!

வண்டலூர் அருகே ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு: தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு!

வண்டலூர் அருகே கீரப்பாக்கம் கிராமத்தில் ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வண்டலூர் அருகே கீரப்பாக் கம் கிராமத்தில் பழமையான கல்வெட்டு இருப்பதாக கிராம மக்கள் சார்பில் தமிழக தொல்லி யல் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து தமிழக தொல்லியல் துறை சார்பில் கிராமத்திற்கு சென்று முதல் கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இது குறித்து தமிழக தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வண்டலூர் அருகே கீரப்பாக்கம் கிராமத்தில் பழமையான கல்வெட்டுகள் இருப்பதாக கிராம மக்களிடமிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து முதல் கட்டமாக மக்கள் சொல்லுவது உண்மையா என ஆய்வு செய்தோம். அதில் ராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்து கல்வெட்டு இருந்தது. 4அடி உயரமும், 6அடி அகலம் கொண்டதாகவும், 10 வரிகளில் தமிழ் மற்றும் கிரந்தம் கலந்த எழுத்துகள் உள்ளன.

இது 8 அல்லது 9-வது நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாக இருக்கும். மேலும் குதிரையுடன் வீரர்கள் இருப்பது போலவும், வாள் மற்றும் சில சின்னங்கள் இருப்பது போலவும் அதில் இடம் பெற்றுள்ளது. இதனை வைத்து பார்க்கும் போது வணிகம் செய்த இடமாகத் தெரிகிறது. கடல் அருகில் இருப்பதால் இவை வணிகம் செய்யும் இடமாகவும் வணிகர்கள் இங்கு நினைவு சின்னம் வைத்திருக்க கூடும். விரைவில் இந்த கல்வெட்டை கிராமத்திலேயே வைத்து படியெடுத்து (மாதிரி) பின்னர் அவை அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டு ஆய்வு மேற்கொள்ளவும் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: