திருவண்ணாமலையில் பல்லவ மன்னன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலையில் பல்லவ மன்னன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலையில் பல்லவ மன்னன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை அருகே பொற்குணம் கிராமத்தில் பல்லவ மன்னன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டு கி.பி. 869 முதல் 901 வரை ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் கம்பவர்மனுடைய 25-வது ஆண்டு கல்வெட்டு ஆகும். இது பொறிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 894-ம் ஆண்டாக இருக்கலாம். பல்லவ மன்னன் கம்பபோத்தரைய விக்கிரமன் என்று இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பொற்குணம் என்று அழைக்கப்படும் இவ்வூர் பொற்குன்றம் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இதில் வேணாட்டுக் காந்தளூர் கூற்றத்து புதனாட்பாடியில் ஏரியின் கிழக்கு மதகின் அருகே உள்ள நீரோடும் பாதையில் இருந்த இடத்தை பண்படுத்தி விளை நிலமாக்கி கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. அப்படி திருத்தி விளை நிலமாக்கப்பட்ட நிலத்திற்கு கல்கிலியேரிச் செறு என்று பெயரும் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த கொடையான ஏரிபராமரிப்பு நிலத்தை என்றென்றும் பாதுக்காத்து நிலைக்க செய்பவர்களின் கால்களை தன் தலை மீது வைத்துப் போற்றுவதாகவும் அந்த கல்வெட்டில் கங்க மன்னர் பிருதிகங்கரையர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து இந்த கல்வெட்டு பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: