சாதி மதம் தாண்டிய தமிழன் என்பதை வாழ்ந்து காட்டிய மாபெரும் தமிழன்.! – மகிபை. பாவிசைக்கோ..!

மகிபை. பாவிசைக்கோ..!

மகிபை. பாவிசைக்கோ..!

மகிபை. பாவிசைக்கோ..! (நினைவுநாள்: 2016.12.13)

பிறப்பாலே எந்தக் குடியில் பிறந்தவன் என்று கற்பிக்கப்பட்டாலும் எந்த மதத்தில் பிறந்தவன் என்று கற்பிக்கப்பட்டாலும் அந்த அடையாளங்களை யார் யாரோ என்னென்ன அரசியலுக்குப் பயன்படுத்தினாலும் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, நான் முதலிலும் தமிழன், வாழ்விலும் தமிழன், சாவிலும் தமிழன் என்று முற்றிலும் தமிழனாக வாழ்ந்துகாட்டிய ஒரு மாவீரன், ஐயா பாவிசைக்கோ.!

பதினாறு அகவையிலேயே, தன் தாயிடம் ‘நான் தமிழுக்கெனப் பிறந்தேன், தமிழ் மண்ணுக்கெனப் பிறந்தேனம்மா என்று சொல்லி,வாழ்க்கை முழுக்கத் தமிழனாகவே வாழ்ந்தவர்,ஐயா பாவிசைக்கோ.!

உலகத்திலேயே மிக வெறி பிடித்த பல சமயங்களில், முன்னணியில் இருப்பவற்றில் ஒன்று முகமதிய மதம். அதிலிருந்து கொண்டு தமிழ் அடையாளத்தையும் முன்னிறுத்திக் கொண்டு மாபெரும் தமிழனாக வாழ்ந்து மறைந்தவர், ஐயா பாவிசைக்கோ.!

அவருடைய வாழ்க்கை வரலாறு, வீழ்ந்து கிடக்கிற தமிழர்களுடைய கண்ணைத் தொடர்ந்து திறக்கும் வழிகாட்டும்.! மறக்காமல் அவரை நாம் நினைப்போம். நம்மைப் பூட்டிய கைவிலங்குகளின் திறப்பு அவரது கைகளில் இருக்கிறது, அவரைப் பற்றிய நினைவில்தான் இருக்கிறது.!

அன்னாரை மறக்காமல் நினைப்போம், நம் கைவிலங்குகளைத் தறிப்போம்.!

அவர் வாழ்ந்த வாழ்க்கை …!

paavaico2தமிழீழத்திற்கு அவ்வளவு உயிர் கொடுத்த உணர்வுகளைக் கருநாடகத் தமிழர்களுக்குக் கடத்தியவர்; எத்தனை எத்தனை கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள்; எத்தனை காவல்துறைக் கண்டிப்புகளையெல்லாம் தாண்டி, தமிழர்களைத் திரட்டியவர்!

பேரறிஞர் . குணாவிற்கு தோன்றாத்துணையாக இறுதிவரை இருந்தவர்! வாழ்நாளெல்லாம் பேராசான் குணாவிற்குத் துணைநின்ற ஒரு மாபெரும் தமிழன், பாவலன்.!

தமிழர் நாம் தூக்கிப் பிடிக்க வேண்டிய ஆள்களில் ஒருவர் , பாவிசைக்கோ. தமிழர் தேசியக் கருத்தியலுக்குப் பகுதி வாழ்க்கையைப் பகிர்ந்தளித்தவர்களும் தங்கள் இறுதிப்பகுதி வாழ்க்கையை எதிரிகளுக்கு ஒப்படைத்தவர்களுமாகிய ம.பொ.சி., ஆதித்தனாரைத் தூக்கிப் பிடிப்பதைவிட ,

முழு வாழ்க்கையையும் தமிழர் தேசியத்திற்கு ஒப்படைத்தவரும் தன் இறுதி மூச்சு வரை எதிரிகளிடம் மண்டியிடாமல் போராடியவருமான மாவீரன் மகிபை-பாவிசைக்கோவைத் தூக்கிப் பிடிப்போம்.!

இரண்டகர்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு இருக்கிற தமிழ் மண்ணிலே முதலிலிருந்து இறுதிவரைக்கும் ஒரே நிலைப்பாட்டில் இருந்த ஒரு மாவீரன், பாவிசைக்கோ!
வாளெடுத்தால் கீழ்வையாப் பூட்கையன், மகிபை பாவிசைக்கோ!!

மகிபை பாவிசைக்கோவைத் தூக்கிப் பிடிக்கச் சொல்வது வெறும் நன்றி உணர்ச்சிக்காக மட்டுமல்ல, நமக்கு வழி திறப்பதும் அவரன்னோரால்தான்!

அவரை நினை, நமக்கு விடியும்.!
அவரை நினை, நம் கைவிலங்குப் பூட்டு திறக்கும்.!!

-அருள்நிலா.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: