தென்பெண்ணை ஆற்றில் நரசிம்மர் உற்சவர் சிலை கண்டெடுப்பு!

தென்பெண்ணை ஆற்றில் நரசிம்மர் உற்சவர் சிலை கண்டெடுப்பு!

தென்பெண்ணை ஆற்றில் நரசிம்மர் உற்சவர் சிலை கண்டெடுப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள கோபசந்திரம் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பின்புறம் தென்பெண்ணை ஆற்றில் நரசிம்மர் உற்சவ மூர்த்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஒசூர் அருகே கோபசந்திரம் கிராமத்தில் பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்றில், பாறைகளுக்கு நடுவே ஒரு சுவாமி சிலை தென்பட்டது. இதனைக் கண்ட மக்கள், சுவாமி சிலை குறித்து கோயில் நிர்வாகத்துக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து, கோபசந்திரம் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பாறைக்கு நடுவே புதைந்திருந்த சிலையை மீட்டெடுத்தனர். ஒன்றரை அடி உயரம், 45 கிலோ எடை கொண்ட நரசிம்மர் உற்சவ மூர்த்தி பஞ்சலோக சிலையானது, சங்கு சக்கரத்துடன் அமர்ந்த கோலத்தில் இருந்தது. இதையடுத்து, பொதுமக்கள் அந்த சிலைக்கு அங்கேயே சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் சிலை சூளகிரி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. விசாரணைக்கு பிறகு அந்த சிலை, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது தமிழ்நாட்டில் ஆங்காங்கே பல இடங்களில் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சிலை கிடைத்துள்ள தகவல், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர் தலைமையிலான காவலர்கள் விரைவில் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வந்து விசாரணை நடத்துவர் எனத் தெரிகிறது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட... ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு! திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் க.மோகன்காந்த...
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண... விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு! விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம் ஈயனூர் என்ற கிர...
அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுப... அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுபிடிப்பு! தமிழகம் கொண்டுவர நடவடிக்கை! நாகை மாவட்டத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்க...
ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் மேலும் 5 சிலைகள் கண... ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் மேலும் 5 சிலைகள் கண்டுபிடிப்பு! திருநெல்வேலி மாவட்டம், குலசேகரமுடையார் கோவிலில், திருடப்பட்ட பஞ்சலோக நடராஜர் சிலையுடன...
Tags: