பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியதாவது!

பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியதாவது!

பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியதாவது!

பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் பிபிசி-யிடம் கூறியதாவது:

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு பா. நடேசன் , சமாதான செயலக பணிப்பாளர் திரு.புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சரண்டைந்த போது அவர்களை கோத்தபாய சுட்டுக்கொல்லுமாறு பணித்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


சவேந்திர சில்வா தலைமையிலான சிங்களப் படைகள் சுட்டுக் கொன்றனர். ஆனால் சிங்களம் இதனை மூடிமறைத்து வருகின்றது.

சிரியாவில் கொல்லப்பட்ட போர்க்கால ஊடகவியலாளர் மாரி கொல்வின் முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

சரண்டைந்தவர்கள் கொல்லப்பட்ட தினத்தில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷ்ய செய்தியாளரிடம் பேசியிருந்த மாரி கொல்வின், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி நான்கு நாட்களாக பேச்சு நடந்ததிருந்ததாகக் கூறினார்.

வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி சரணடையும் நடேசன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சர்வதேச சட்ட நியமங்களின் படியே நடத்தப்படுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரநேரு சந்திரகாந்தன் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் மாரி கொல்வின் தெரிவித்திருந்தார்.

கொலை செய்யப்பட்ட நடேசன் மற்றும் புலித்தேவன் இறுதித் தருணத்தில் (2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அதிகாலை, 1 மணி 6 நிமிடங்கள்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனுடன் தொடர்பு கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், ‘நாங்கள் முடிந்தளவுக்கு வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி செல்கிறோம்’ என்று கூறியிருந்ததாக மாரி கொல்வின் பிபிசி செய்தியாளரிடம் கூறியிருந்தார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பிரமுகர்கள் மற்றும் ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் அறிந்திருந்ததாக மாரி கொல்வின் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளைக் கொடியை பிடித்தபடி சரணடைவோர் தொடர்பில் மூன்றாம் தரப்பு மேற்பார்வை அவசியப்படாது என்று ஜனாதிபதி பாதுகாப்பு உத்தரவாதம் அளித்திருந்ததை ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியாரும் தன்னிடம் கூறியதாக மாரி கொல்வின் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இவை எல்லாம் நடந்த பின்னர் நம்பியாரை நீங்கள் தொடர்பு கொண்டிருந்தீர்களா எனக் கேட்டபோது இல்லை என பதிலளித்த மாரி கொல்வின் விடுதலைப்புலிகள் ( திரு.நடேசன், திரு புலித்தேவன்) சரணடைவது தொடர்பில் நான்கு நாட்களாக சர்வதேசத்துடன் தொடர்பில் இருந்து பேசியவண்ணம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன் , ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த விடுதலைப்புலிகள் இறுதி நேரத்தில் எல்லோரும் அறிந்திருக்கும் வகையிலேயே கொல்லபப்ட்டுள்ளார்கள் எனவும் கூறியிருந்தார்.

சிறிலங்கா அரசின் உத்தரவாதத்தினை நம்பாது மூன்றாம் தரப்பு ஒன்று இருந்திருக்குமானால் சரண்டைந்தவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் எனவும் குற்றம் சாட்டியிருந்தார் மாரி கொல்வின் .

  • நன்றி – பிபிசி

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

மே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை! ... மே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை! தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்! இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேற...
தனக்கே உரித்தான பல இயற்கை கொடைகளையும், வரலாற்றுச் ... தனக்கே உரித்தான பல இயற்கை கொடைகளையும், வரலாற்றுச் சின்னங்களையும் தன்னகத்தே காத்து வருகின்றது யாழ்ப்பாணம்! முப்பது வருட கால கோர யுத்தத்தில் பல வரலாற்...
“விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையா... "விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையான குண்டுகள் மீட்பு"! கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலக வளவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட ...
ஆனையிறவுப் படைத் தளம் தமிழர் சேனைகளினால் வெற்றி கொ... ஆனையிறவுப் படைத் தளம் தமிழர் சேனைகளினால் வெற்றி கொள்ளப்பட்ட புனித நாள் (22.04.2000)! ஆனையிறவுப் படைத் தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு...
Tags: