”இந்திய மொழிகள் அனைத்திலும் கல்வெட்டுகள் இருந்தாலும் தமிழ் மொழியில் மட்டுமே கல்வெட்டுகள் அதிகம்”!

''இந்திய மொழிகள் அனைத்திலும் கல்வெட்டுகள் இருந்தாலும் தமிழ் மொழியில் மட்டுமே கல்வெட்டுகள் அதிகம்''!

”இந்திய மொழிகள் அனைத்திலும் கல்வெட்டுகள் இருந்தாலும் தமிழ் மொழியில் மட்டுமே கல்வெட்டுகள் அதிகம்”!

”இந்திய மொழிகள் அனைத்திலும், கல்வெட்டுகள் இருந்தாலும், தமிழ் மொழியில் மட்டுமே, அதிக எண்ணிக்கையில் கல்வெட்டுகள் உள்ளன,” என, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர், சே.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில், மூன்று நாட்கள் நடைபெறும், பழங்கால கல்வெட்டு வாசிப்பு குறித்த பயிற்சி முகாம், துவங்கியது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

அதைத் துவக்கி வைத்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர், சே.கோவிந்தராஜ் பேசியதாவது:

இந்திய மொழிகள் அனைத்திலும் கல்வெட்டுகள் இருந்தாலும், நம் தாய் மொழியான, தமிழ் மொழியில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பிராமி எழுத்துக்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், மதுரையைச் சுற்றியுள்ள மலைக் குன்றுகளில் காணப்படுகின்றன.

அந்த எழுத்துகளில் இருந்து தான், வட்டெழுத்துக்களும், இப்போது நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துகளும் வளர்ந்துள்ளன. பாண்டிய நாட்டு கல்வெட்டுகள் அதிகமாக காணப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: