தமிழ் படிக்கக் கட்டணமில்லை: நெல்லை பல்கலைக்கழகம் அதிரடி!

தமிழ் படிக்கக் கட்டணமில்லை: நெல்லை பல்கலைக்கழகம் அதிரடி!

தமிழ் படிக்கக் கட்டணமில்லை: நெல்லை பல்கலைக்கழகம் அதிரடி!

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் தமிழியல் துறையில் கட்டணம் இல்லாமல் இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில், முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழ்ப் பாடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஆங்கிலப் பாடத்தைக் கற்பதில் இருக்கும் ஆர்வத்தில் சிறிய அளவில் கூட தமிழ்ப் பாடத்தைப் படிப்பதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. அதனால் தமிழ்ப் பாடத்தில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக இலவசக் கல்வி அளிப்பதாகப் பல்கலைக்கழகத்தின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இது தொடர்பாகப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரான சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென் மாவட்டங்களில் தமிழ் முதுகலை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதனால் தமிழ் வளர்ச்சி தடைப்படும் என்பதால், தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் இந்த ஆண்டு முதல் முதுகலைப் பட்டப் பாடத்தில் சேரும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான (2018-2019) முதுகலைப் பாடத் திட்டத்தில் தமிழியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. அதனால் கட்டணம் இல்லாத இலவசக் கல்வியாக முதுகலை தமிழ் படிப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்து இருக்கிறார்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழ் வளர்ச்சிப் பணிகளில் காணப்படுவது ஆக்கமா? தேக்... தமிழ் வளர்ச்சிப் பணிகளில் காணப்படுவது ஆக்கமா? தேக்கமா? தமிழ் வளர்ச்சி என்பது புலவர்கள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள், தமிழ் ம...
`கடவூர் பகுதியில் நிலவில் உள்ள பாறைகள் மற்றும் அரி... `கடவூர் பகுதியில் நிலவில் உள்ள பாறைகள் மற்றும் அரிய வகை கற்கள்!' - ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யத் தகவல்! ``உலகத்தில் எங்கும் இல்லாத அரிய வகை கற்கள் மற்...
“கல்வியின் மதிப்பை உணர்ந்தவர்கள் தமிழர்கள்&#... "கல்வியின் மதிப்பை உணர்ந்தவர்கள் தமிழர்கள்" - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்! தமிழகத்தில் சாதாரண குடும்பங்கள் கூட, கல்வியின் மதிப்பை நன்கு உணர்...
தமிழ் இருக்கைக்குக் கரம் கொடுத்த 7,335 தமிழர்கள்! ... தமிழ் இருக்கைக்குக் கரம் கொடுத்த 7,335 தமிழர்கள்! - ஹார்வர்டு ஒப்பந்தத்தில் இடம்பெறப் போவது என்ன? ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான முழுப் பணமும் சேர்ந்த...
Tags: 
%d bloggers like this: