தமிழீழ விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் பரதரராஜன் தியாகராஜா (கப்டன் மொறிஸ்)!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் பரதரராஜன் தியாகராஜா (கப்டன் மொறிஸ்)!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் பரதரராஜன் தியாகராஜா (கப்டன் மொறிஸ்)!

கப்டன் மொறிஸ் (செப்டம்பர் 12, 1969 – மே 1, 1989, மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை) என்ற புனைபெயரைக் கொண்ட பரதரராஜன் தியாகராஜா ஒரு விடுதலைப் புலி போராளியாவார். இவர் தனது பதினைந்தாவது வயதில், 1984-இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, ஐந்து ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டார். குறுகிய காலப் பகுதியில் அளப்பரிய இயக்கப் பணிகளாற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் ஆனார். மே 1, 1989-இல் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் மரணம் அடைந்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இவர் தியாகராஜா மற்றும் சிவகாமசுந்தரி தம்பதிகளின் ஆறாவது புதல்வன். இவரது தந்தை சபாபதிப்பிள்ளை தியாகராஜா இலங்கையின் புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் பல வருடங்களாகக் கடமையாற்றியவர். இவரது அண்ணன் பிறேமராஜன் (தீட்சண்யன்) கவிஞர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் புலிகளின் குரல் வானொலிக்கு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர். இவரது தம்பி மயூரன், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராவார். மயூரன் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் நவம்பர் 11, 1993-இல் மரணமடைந்தார்.

மொறிஸ் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும், புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலையிலும் கற்றார்.

1984 இல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1983 இல் தென்னிலங்கையில் நிகழ்ந்த தமிழர் படுகொலைகளும் அதனைத் தொடர்ந்து போராளிகளின் படகோட்டியாக இருந்த மறைந்த பொலிகண்டி கணேஸ்மாமா உடனான சந்திப்பும் இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையக் காரணமாகக் கருதப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் போராளிகளின் தாக்குதல்களுக்கு உதவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார். பருத்தித்துறை, தம்பசெட்டி வீதியால் சென்று கொண்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் வாகனத்திற்கு ´கிரனைட்´ எறிந்து அவர்களின் ரோந்து நடவடிக்கையைத் தடை செய்ததால், மேலிடத்தின் உடனடிக் கவனத்துக்கு உள்ளாகி சில முக்கிய பதவிகளைப் பெற்றார்.

1) 1985 இல் தொண்டைமானாற்றில் போராளிகளின் காவல் தரிப்பில் ஈடுபட்டு இராணுவம் கடல் வழியாக உள்ளே நுழையாமல் எதிர்த்தாக்குதல் நிகழ்த்தும் கடமைகளில் ஈடுபட்டிருந்தார்.

2) அந்தக் காலகட்டத்திலேயே போராளிகளுக்கான விசேட இராணுவப் பயிற்சியைப் பெற்று முதல் தடவையாக பூநகரித் தாக்குதலில் பங்கேற்று நெருப்புக் காயங்களுக்கு ஆளாகி யாழ் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார்.

3) 1986 இல் பருத்தித்துறை, கலட்டிப் பகுதியில் நியாய விலைக் கடை ஆரம்பித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் ஊர்மக்களுக்கு நியாய விலையில் பொருட்களை வழங்கியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புக்குத் தேவையான பணத்தைத் திரட்ட உதவிகள் புரிந்தார்.

4) 1987 இல் பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. போர்ச் சூழலினால் நீதி மன்றங்கள் இயங்காமல் இருந்த காரணத்தினால் அமைப்பு சார்பான கிராம நீதிமன்றங்களை நிறுவி, மக்களின் பிரச்சனைகளை இலகுவாகத் தீர்த்து வைக்கும் பணியிலும் அவர் பெரு வெற்றி கண்டிருந்தார்.

5) 1988 இல் மொறிஸ் இந்திய இராணுவத்தினரின் பெரும் தேடுதலுக்கும் ஆளானார். இதனால் 1987 – 1988 காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினருக்கு எதிரான பல தாக்குதல்களை ஈடுபட்டுள்ளார்.

1989, மே முதலாம் நாள், இந்திய அமைதிப் படையுடனான மோதலில் உயிரிழந்தார். இவருடன் லெப்.றம்போ மற்றும் வீரவேங்கை சிறீ ஆகியோரும் உயிரிழந்தனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி!... முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி! கப்டன் அங்கயற்கண்ணி (10, மே, 1973 - ஆகஸ்ட் 16, 1994, கொக்குவில், மேற்கு - யாழ்ப்பாணம்) என்னும் இயக்கப்...
லெப்டினன் கேணல் திலிபன்: காந்திய வழியில் உலகை ஈர்த... லெப்டினன் கேணல் திலிபன் உண்ணாவிரத மேடையின் அருகே உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்! “புரட்சி” என்கிற வார்த்தைக்குப் அடுத்து நமது நாட்டில் மதிப...
இறுதிப் போரின்போது அநாதையான நிலையில் ஈழ மக்கள் ; ... இறுதிப் போரின்போது அநாதையான நிலையில் ஈழ மக்கள் ; 8 ஆண்டுகளின் பின்னர் வெளியான புகைப்படங்கள்! 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது பாதிக்க...
தம்பி, முன் நின்று நடத்திய கொரில்லா தாக்குதலில் தோ... தம்பி, முன் நின்று நடத்திய கொரில்லா தாக்குதலில் தோள் கொடுத்த லெப்.செல்லக்கிளியின் வீரவணக்க நாள் இன்று! 1972-களிலேயே தோற்றம் பெற்ற தமிழீழ விடுதலைப் ப...
Tags: 
%d bloggers like this: