‘கோமாரி’ மந்திரக்கல் சென்னையில் கண்டுபிடிப்பு!

'கோமாரி' மந்திரக்கல் சென்னையில் கண்டுபிடிப்பு!

‘கோமாரி’ மந்திரக்கல் சென்னையில் கண்டுபிடிப்பு!

கால்நடைகளின் கோமாரி நோயை தீர்க்க, நடப்பட்ட மந்திரக்கல், சென்னையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளை தாக்கும், கோமாரி வைரஸ் நோய்க்கு, தடுப்பூசி கண்டு பிடிக்கப்படாத காலத்தில், மந்திரம் எழுதி பலகை கல் நட்டு, பூஜைகள் செய்யும் வழக்கம், தென் மாநிலங்களில் இருந்துள்ளது.

தென்னக தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர், சென்னை, வண்டலுாரை அடுத்த, ரத்தினமங்கலத்தில், கோமாரி மந்திரக் கல்லை கண்டுபிடித்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


ரத்தினமங்கலத்தில் கள ஆய்வு செய்த போது, தெரு ஓரத்தில் நடப்பட்ட பலகைக்கல்லை கண்டு பிடித்தோம். அதற்கு, தமிழகத்தில், சன்னியாசிக்கல், கோமாரிக்கல், மந்தைக்கல், சிலைக்கல், மந்திரக்கல் என்னும் பல பெயர்கள் உண்டு. இக்கல்லை, தர்மபுரி, சேலம், தென்ஆற்காடு, வடஆற்காடு மாவட்ட மக்கள், சன்னியாசிக்கல் என்ற பெயரில், இன்றும் வழிபடுகின்றனர்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கலப்பின மாடுகளின் வழியே, குளம்புடைய கால்நடைகளுக்கு, கோமாரி என்னும் கொள்ளை நோய் பரவியது. அந்நோயில் இருந்து, மாடுகளை காக்க, சீர் செய்யப்பட்ட ஒரு பலகைக்கல்லில் மந்திர எழுத்துக்கள், கட்டங்களை வரைந்து, நிலத்தில் நட்டு, மாடுகளுக்கு பூஜை செய்வர்.

சில பகுதிகளில், கல்லில் மாடுகளை கட்டியும், கல்லில் குடத்து நீரை ஊற்றி அதை மாடுகளை தாண்ட செய்தும், சுற்றி வர செய்தும் வழிபட்டனர். ரத்தின மங்கலத்தில் உள்ள கல்லை, கோமாரிக்கல் என்றே, அப்பகுதி மக்கள் அழைப்பதோடு, வெள்ளிக்கிழமையில், நோயுற்ற மாடுகளை, அக்கல்லை சுற்ற வைத்து பூஜை செய்கின்றனர். அக்கல், 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என, தென்னக தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: