கொங்கு சக்கரவர்த்தி தலையூர் காளி மன்னர்!

கொங்கு சக்கரவர்த்தி தலையூர் காளி மன்னர்!

கொங்கு சக்கரவர்த்தி தலையூர் காளி மன்னர்!

கொங்கர்கள் வாழ்கின்ற நாடாம் கொங்கு நாட்டிலே போர்களம் புகுந்து காவு கொள்ளும் கவுண்டர் குலத்திலே வாளோடு தோன்றிய வெற்றித் திருமகன். எதிரிகளை புற முதுகிட்டு ஓடச் செய்யும் வல்லாண்மை பொருந்திய வல்லவன். போர்களத்தின் தெய்வமான காளியை (கொற்றவையை) குல தெய்வமாக கொண்ட கவுண்டர்களின் தலைவன். 24 கொங்கு நாட்டில் முதன்மை ஊராம் தலையூர். அத்தலைய நாட்டின் தலைவன் காளிங்கரையன். தலையூர் காளிங்கரையன் என்பவன் 24 கொங்கு நாடுகளுக்கும் தலைநகராக விளங்கிய தலையூரை ஆண்ட அரசன். கொங்கு நாட்டின் வீர வரலாற்றில் தவறாது இடம் பெற்றிருப்பவன். இவன் ஒட்டு மொத்த கொங்கு வேட்டுவக் கவுண்டர்களுக்கும் தலைவனாக அறியப்படுகிறான். மேலும் தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன். மேலும் கொங்கு சக்கரவர்த்தி என போற்றப்படுபவர். இத்தலையூர் ஆனது இன்றைய சின்னத் தாராபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


காளிங்கரையன் = காளி + அரையன். காளி – காளியின் அருளால் வளர்க்கப்பட்டவன். அரையன் – மன்னன். இவனை தலையநாட்டு பட்டக்காரர் வம்சாவளி எனக் குறிப்பிடுவர். இன்றும் தலையநாட்டு பட்டக்காரர் மரபு பின்பற்றப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட கொங்கு நாட்டு கல்வெட்டுக்களில் தலையூர் காளிங்க அரையர் சுந்தரபாண்டிய சோழகோன் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

தலையூரை தலைநகராக கொண்டு ஆண்ட வேட்டுவ கவுண்டர் இன மன்னனின் மகன் ஆவான்.தலையூர் காளி மன்னன் வில்லாற்றலில் வல்வில் ஓரியை நினைவுக்கு கொண்டு வருபவன். வல்வில் ஓரியின் வழித் தோன்றலே இந்த தலையூர் காளி மன்னன். இவன் தலையூரில் உள்ள பிரம்ம காளித் தேவி அம்மனை குலதெய்வமாக கொண்டவன்.

பருத்த தோளோடும் வாளோடும் சீராட்டி வளர்க்கப்பட்டான் இந்த கொங்கு மன்னன். இவனை மக்கள் தலையூரான் என விரும்பி அழைத்தனர். இவன் இளவயதிலே தனக்கென ஒரு படையை தந்தையிடம் வாதிட்டு பெற்று நிருவகித்து வந்தான். அப்படையானது தலையூரான் படை என்றும் காளி சேனை என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்தது.மாட மாளிகையில் மன்னர் குலத்தில் பிறந்த மாவீரன் என மக்கள் அவனை போற்றினர்.ஒரு முறை காட்டிற்கு வேட்டையாட சென்றபொழுது இரண்டு புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டான். உடன் சென்றோரோ இளவரசன் ஆயுள் முடிந்துவிட்டது என கூறுமாறு வேளாண் (வேலையாள்) ஒருவன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.

இரண்டு புலிகளுக்கு நடுவே பயமறியாது பாயும் வேங்கை போல நேர்கொண்ட பார்வையுடன் புலியை எதிர்த்து நின்றான். உடன் சென்றவர்கள் இதுபோன்று மனவலிமை கொண்ட ஒரு கொங்கனை கண்டதில்லை என எண்ணி வியந்து செய்வதறியாது நின்றனர். ஒரு கையில் தன் முன்னோர்களின் மிக முக்கிய ஆயுதமான தண்டெறியும் (3 முதல் 5 அடி நீளம் கொண்ட குத்து ஈட்டி) மறு கையில் ஒளி பொருந்திய கூர்மையான வாளும் கொண்டு வேங்கை வேட்டையாட நிற்பது போல நின்றான். வலது புறத்திலிருந்த புலி பாய்ந்து காளிங்கரையன் முதுகை பிளக்க முயன்றது. முதுகில் புண்படுதலோ தற்கொலை செய்தலோ வீரமற்ற கோழைகளின் செயல் என்பதை நன்கு அறிந்த காளிங்கரையன் தனது மார்பை வலப் பக்கம் திருப்பி கையொன்றில் இருந்த தண்டெறியால் புலியின் மார்பிலே குத்தி தனது கையினால் அப்புலியை தாங்கி நின்றான். மறு கையில் கொண்ட வாளால் மற்றொரு புலியை நோக்கி வீசினான். அவ்வாளானது அப்புலியின் தலையினை கண் இமைக்கும் கணத்தில் அதன் உடலிலிருந்து பிரித்தது. அன்று முதல் அவன் புலிக்குத்தி என்னும் பட்டத்துடன் அழைக்கப்பட்டான்.

அண்ணன்மார் கதை என வழங்கப்படும் பொன்னர் சங்கர் கதையில் தன்னை நாடி வந்த கேளாத்தா எனும் வேளாளர்க்கு பக்க பலமாக இருந்தவன். போரின் இறுதியில் பொன்னர், சங்கர் ஆகிய இருவரும் தலையூர் காளி மன்னனை எதிர்த்து போரிட முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக அண்ணன்மார்க் கதை கூறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தலையூர் காளித்தாய் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. போரில் பொன்னர் சங்கர் இருவரையும் வென்று நாடு திரும்பிய தலையூர் காளிங்கஅரையர் சுந்தரபாண்டிய சோழகோன் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தாய் தெய்வமான பெரியநாயகி அம்மனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இது அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகிறது. அன்றுமுதல் ஆண்டு தோறும் மாசித் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. போரில் வென்ற வெற்றியின் அடையாளமாக இவ்விழா கருதப்படுகிறது. என்ன திருவிழா எடுத்தாலும் படுகளம் பக்கத்தில் செல்ல காளியின் பிள்ளைகள் கதறுவார்கள்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: