கீழடி அகழாய்வில் கிடைத்த எலும்புகளை ஆய்வுசெய்ய தனி அதிகாரிகள்!

கீழடி அகழாய்வில் கிடைத்த எலும்புகளை ஆய்வுசெய்ய தனி அதிகாரிகள்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில், கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, ஆய்வைத் தொடங்கியது.

ஆய்வு மாதிரிகளைக் கரிமவேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில், கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டன. அதற்குப்பின், அடுத்தடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து, தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது, கடந்த ஜூன் 13 -ம் தேதி முதல் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த ஜூன் 25 -ம் தேதி, மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புகளில் உள்ள இரட்டைச் சுவர்கள் மற்றும் நேர் சுவர் கண்டறியப்பட்டன. அதைத் தொடர்ந்து மேலும் ஒரு சுற்றுச்சுவர், 5 அடி உயரம் கொண்ட உறைகிணறு மற்றும் நேர் சுவர் ஆகிய தொன்மையான சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாமல், மிகவும் தொன்மையான சுடுமண்ணாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள், பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருள்கள் கிடைத்தன. தற்போது, விலங்குகள் இருந்ததற்கான சான்றாக, சிறிய எலும்புத் துண்டுகள் கிடைத்துள்ளன.

கீழடியில் தற்போது கிடைத்த விலங்குகளின் எலும்புகளை ஆய்வு செய்ய, அதற்கெனத் தனி ஆய்வாளர்களை நியமித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: