கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கான பூமி பூஜை நடைபெற்றது!

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கான பூமி பூஜை நடைபெற்றது!

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கான பூமி பூஜை நடைபெற்றது!

பல்வேறு தடைகளை தாண்டி கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் கீழடி பள்ளிச்சந்தை புதூரில் மத்திய தொல்லியல்துறையின் பெங்களூரு அகழ்வாய்வு பிரிவு சார்பில் மூன்று ஆண்டுகள் அகழ்வாய்வு நடந்தது. இதில் சங்க காலத் தமிழர்களின் நகர, நாகரிகத்தின் ஆதாரமாக சுமார் 7,600 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. தமிழர்களின் நாகரீகத்தை மத்திய அரசு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் அப்போது குற்றம் சாட்டினார்கள்.

இதில் நான்காம் ஆண்டு அகழாய்வினை மேற்கொள்ள பெங்களூரு அகழ்வாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்காமல், தமிழகத் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் கழகம் அனுமதி வழங்கியது.

தமிழகத் தொல்லியல் துறையின் உதவி இயக்குநர் சிவானந்தம் தலைமையில் ஜனவரி மாதம் மேற்கொள்ளக் குழு அமைக்கப்பட்டது. இதற்காகத் தமிழக அரசு ரூ. 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தொல்பொருட்கள் புதைந்துள்ள இடத்தினை கண்டறிவதற்கு ஜி.பி.ஆர்.எஸ். ரேடார் கருவி மூலம் ஆய்வு செய்தபோது, தொல்பொருட்கள் புதைந்துள்ள நிலத்துக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நிலத்துக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் மூன்று மாதமாக ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று உதவி இயக்குநர் சிவானந்தம் தலைமையில் பூமி பூஜை நடந்தது. ஆய்வு செய்வதற்கு இரண்டரை ஏக்கர் நில உரிமையாளர் சோணை, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சக்திவேல், பொறியாளர் ஒளி மாலிக், திருப்புவனம் வட்டாட்சியர் கமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: