விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல்!

விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல்!

விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல்!

கட்டுநாயக்கா இலங்கையின் மேல் மாகாண நகரமான நீர்கொழும்பின் புறநகராகும். இங்குதான் இலங்கையின் முதன்மை பன்னாட்டு வான்வழி வாயிலான பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையமும், கொழும்பு வானூர்தி நிலையமும் அமைந்துள்ளது. 1977இல் ஏற்பட்ட அரசு மாற்றம் மற்றும் திறந்த பொருளியல் கொள்கைகளினால் இங்குள்ள பெரும் நிலப்பகுதி கட்டற்ற வணிக வலயம் (தற்போது ஏற்றுமதி மேம்பாட்டு வலயம்) உருவாக்கிட வழங்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சிறீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் கட்டுநாயக்கவிலுள்ள வானூர்தி நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது. பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம், கட்டுநாயக்க நாட்டின் முதன்மை வானூர்தி நிலையமான பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் கட்டுநாயக்கவில் அமைந்துள்ளது.

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் திருப்புமுனையினை ஏற்படுத்திய கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது தரைகரும்புலிகள் சென்று தாக்குதல் நடத்தி வீர வரலாறு படைத்து விடுதலை போராட்டத்திற்கு திருப்ப முனையினை ஏற்படுத்திய தாக்குதலின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்.

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழர்களின் வரலாற்றில் ஒவ்வொரு தாக்குதல் சம்பவங்களையும் வெற்றி தாக்குதல்களையும் நினைவிற்கொண்டு விடுதலைப்புலிகளின் வீரத்தினையும் வரலாற்றினையும் எடுத்து செல்ல வேண்டிய தேவை உள்ளது.

கட்டுநாயக்காவில் குண்டுகளை ஏற்றி தமிழர் வாழ் இடங்கள் மீது வீசி தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களத்தின் வான் கழுகுகளை அவர்கள் வாழ்கின்ற குகைக்கு சென்று அழித்த கரும்புலி மறவர்களின் வீரத்தினை அவர்களின் வரலாற்றினை இன்று நினைவு கொள்ள வேண்டிய தினமாகும்.
தமிழீதேசியத்தலைவர் அவர்களின் மதிநுட்பத்தின் வெளிப்பாடாக இந்த கட்டுநாயக்கா வான் படைத்தளத்தினை தகர்த்து சிறீலங்கா அரசிற்கும் படையினருக்கம் பாரிய இழப்பினை கொடுத்தார்கள்.

கட்டுநாயக்கா தாக்குதலில் சிறீலங்கா அரசின் விமானங்கள் 28 அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல விமானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. நடத்தப்பட்ட இத்தாக்குதலானது சிறீலங்காவின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான இலங்கை அரசின் சொத்துக்கள் அழிக்கப்பட்டது.

தாக்குதலின் பின்னணி :

இத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர்.

2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 8.30 14 கரும்புலிகள் உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.

2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிக்கப்பட்டது.

தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் :

இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது. விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது. சார்பற்ற அறிக்கை 26 வானூர்திகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன என்று கூறுகின்றது.

முற்றிலுமாக அழிக்கப்பட்டவை :

இரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்

ஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்

நான்கு கிபிர் போர் விமானங்கள்

மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்

இரண்டு எம்.ஐ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்

இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி

இரண்டு வி.வி.ஐ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி

இரண்டு எம்.ஐ (MI) -17 உலங்கு வானூர்தி

மூன்று K-8

சேதப்படுத்தப்பட்டவை :

இரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்

ஒரு – A-340 பயணிகள் விமானம்

ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்

ஒரு எம்.ஐ (MI) -24 உலங்கு வானூர்தி

ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி

நான்கு கிபிர் போர் விமானங்கள்

விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: