வரலாற்று சிறப்பு மிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் !

வரலாற்று சிறப்பு மிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் !

வரலாற்று சிறப்பு மிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் !

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குமுளியில் இருந்து 14 கிமீ தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடியில் இருந்து 6 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு, ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமி தினத்தன்று மட்டுமே தமிழகத்தில் இருந்து பக்தர்கள் சென்று வழிபட்டு வர அனுமதிக்கப்படுகின்றனர். பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பினால் கோவலன் திருட்டுப்பழி சுமத்தப்பட்டு கொல்லப்படுகிறான். இதனால் கோபமடைந்த கண்ணகி, அரசவையில் மன்னனின் தவறை நிரூபிக்க, அக்கணமே மன்னன் நெடுஞ்செழியன் உயிர் துறக்கிறான்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அதன் பின்னரும் ஆற்றுப்படாத கண்ணகி, மதுரையை எரித்து விட்டு, 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் எனும் மலையை அடைகிறார். அங்கிருந்து கண்ணகி தேவலோகம் சென்றதாக வரலாறு சொல்கிறது. கண்ணகி வந்து சேர்ந்த திருச்செங்குன்றம் மலையில்தான், தற்போது மங்கலதேவி கண்ணகி கோயில் இருக்கிறது. இக்கோயில் வளாகத்தில் கேரள மக்கள் வழிபடும் துர்க்கையம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்தக் கோயிலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகள் நடத்துகின்றனர். தமிழ்நாடு, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த அனைவரும் இக்கோயிலில் வழிபட்டுச் செல்கின்றனர். தமிழ்நாடு கேரளா எல்லைப் பிரச்னையில் தற்போது மங்கலதேவி கண்ணகி கோயில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த கோயிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோயில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896 ல் நடத்திய சர்வேயும், 1913, 1915 ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோயில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976ல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோயில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், கூடலூரில் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக் குழு துவக்கப்பட்டு கோயிலைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. 1976ல் இந்த சீரமைப்புக் குழு, கண்ணகி கோயிலுககு செல்ல மலைப்பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதற்காக தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கியது. பின்னர் கேரள அரசின் முட்டுக்கட்டையால் இந்த பணி நடைபெறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகி கோயிலில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் இரு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்து கொள்கின்றனர். வருடந்தோறும் இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் கேரளா அரசு சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைகள் நடத்தி சித்திரை முழுநிலவு திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர்.

மற்ற நாட்களில் இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை. சித்திரை முழுநிலவு தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லாததால் இந்தக் கோயில் பராமரிப்பின்றி கோயிலின் பல பகுதிகள் சிதைந்து போய்விட்டன. கோயில் சுவற்றின் கற்கள் உடைந்து போய் கிடக்கின்றன. கண்ணகி சிலையும் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. தற்போது, சித்திரை முழுநிலவு விழா நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோயிலை சீரமைக்க இரு மாநில அரசுகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகி கோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகிறது. இந்த அமைப்பு தமிழ்நாட்டின் கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கண்ணகி கோயில் தமிழ்நாட்டுக்குரியது அதை மீட்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: