கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி!

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி!

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி!

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவன் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்படுவான். இவன் வேட்டுவ கவுண்டர் இனத்தை சரந்தவன். வன்பரணர் இவனைத் தன் பாடல் (புறநானூறு 153) ஒன்றில் ‘ஆதன் ஓரி’ என்று குறிப்பிடுகிறார். இதன் மூலம் இவன் தந்தை பெயர் ஆதன் என்பதை அறியலாம். ஆதன் என்னும் பெயர் பூண்ட பெருமக்கள் சங்ககாலத்தில் வாழ்ந்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும். 


மரபுக் கதை :

ஒரு முறை வல்வில் ஓரி ஸ்ரீ ராஜபுரம் என்னும் பகுதியில் (தற்போது இராசிபுரம்) வேட்டையாட சொல்லும் போது அங்கு ஒரு பன்றியின் மீது அம்பினை செலுத்த, அப்பன்றியானது ஒரு புதரில் போய் மறைந்து விட, அந்த இடத்தில் வல்வில் ஓரி சென்று பார்க்கும் போது அங்கு பன்றிக்கு பதிலாக ஒரு சிவலிங்கமும், அச்சிவலிங்கத்தின் மீது வல்வில் ஓரி எய்த அம்பும், அந்த அம்புபட்டதால் அந்த சிவலிங்கத்தில் ரத்தமும் கசிந்தது. இதைக் கண்ட ஓரி சிவன்தான் தன்னை பன்றி வடிவில் வந்து சோத்திததாக எண்ணி அவ்விடத்திலேயே சிவ பெருமானுக்கு ஸ்ரீ கைலாச நாதர் திருக்கோயில் என்ற பெயரில் ஆலயம் எழுப்பினான். இதனை குறிக்கும் வகையில் அந்த ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலின் கொடிமரத்தில் சிவபெருமானை குறிக்கும் வகையில் முள் புதரின் முன் பன்றி வடிவமும், வல்வில் ஓரியை குறிக்கும் வகையில் வாளும் கேடயமும், பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இவ்வாலய கோபுரத்தின் பின்புறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

  • ஓரி – தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன்.
  • ஓரி – கொல்லிமலை நாட்டை ஆண்டவன்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

வீரநங்கை வேலுநாச்சியாரின் (Velu Nachchiyar) வரலாறு... வீரநங்கை வேலுநாச்சியாரின் (Velu Nachchiyar) வரலாறு! இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி ஆண்டு கொண...
சிலப்பதிகாரம் முழு தொகுப்பு!... சிலப்பதிகாரம் முழு தொகுப்பு! சிலப்பதிகாரம் சிலம்பு - அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்...
சோழர் வரலாறு – முழு தொகுப்பு !... சோழர் வரலாறு - முழு தொகுப்பு ! சோழர் பழந்தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் ...
Tags: 
%d bloggers like this: