கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே யானையுடன் சண்டையிடும் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே யானையுடன் சண்டையிடும் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே யானையுடன் சண்டையிடும் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள, கொத்தகொண்டப் பள்ளியில், யானையுடன் சண்டையிடும் வீரனின் நடுகல் தொகுப்பை, அறம் என்ற வரலாற்று ஆய்வு மையம், கண்டுபிடித்து உள்ளது.

தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள, கொத்தகொண்டப்பள்ளி என்னும் ஊரில், யூகலிப்டஸ் மர தோப்பில், மூன்று நடுகற்களுடன் கூடிய தொகுப்பு உள்ளது. முதல் நடுகல்லில், வீரன் வலது கையில் உள்ள வாளால், யானையை தாக்குவது போலவும், இடது கையில் உள்ள ஆயுதத்தால், தாக்க வரும் யானையை தடுப்பது போலவும், சிற்பங்கள் உள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அதன் அருகே, மற்றொரு யானை மீது அமர்ந்த வீரன், எதிரே நிற்கும், யானையை விட பெரிய வீரனை தாக்குவது போல உள்ளது. வீரன் கையில் உள்ள வாள், வான் நோக்கி உள்ளது. அதனால், அவ்வீரன், யானையை தாக்கும் போதோ அல்லது யானை தாக்கியோ வீர மரணம் அடைந்திருக்கலாம்.
அவ்வீரனை போற்றும் வகையில், தேவலோகத்தில், அவன் தவம் இருப்பது போலவும், பெண்கள் சாமரம் வீசுவது போலவும், சிற்ப காட்சிகள் செதுக்கப்பட்டு உள்ளன. இது, அரிய சுவர்க்க வகை நடுகல்.

இரண்டாவதாக, கி.பி., 9 – 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, கங்கர்களின் நடுகல் உள்ளது. அதில் உள்ள வீரன், வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் வைத்துள்ளான். அவன் சொர்க்கம் சென்றதை குறிக்கும் வகையில், அமர்ந்திருக்கும் வீரனுக்கு அருகில், இரு பெண்கள் நிற்பது போல், சித்தரிக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள எழுத்துக்கள் சிதைந்துள்ளதால், அதன் மொழியை அறிய முடியவில்லை. மூன்றாவது நடுகல்லில், கையில் வில்லுடன் நிற்கும் வீரனின் சிற்பம் உள்ளது. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக, ஊரின் மையப் பகுதியில், நுழைவாயில் உள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: