பசுவை தெய்வமாக கருதுவது, தானம் வழங்குவது குறித்த, 15ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பசுவை தெய்வமாக கருதும் 15ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பசுவை தெய்வமாக கருதும் 15ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பசுவை தெய்வமாக கருதுவது, தானம் வழங்குவது குறித்த, 15ம் நுாற்றாண்டு கல்வெட்டு, திண்டுக்கல்லில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் – பழநி ரோட்டில், முருகபவனம் அருகே, 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டை, விஸ்வ நாத தாஸ் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த கல்வெட்டில், பசுவை தெய்வமாகவும், பசுவை தானமாக வழங்குவதையும் காட்சிப்படுத்தி உள்ளனர்.

பசுக்கள் செழிப்புடன் இருக்கும் நாடு, வளம் உள்ளதாக இருக்கும். நாடு செழிக்க, பசு வழிபாடு முக்கியம் என்றும், லட்சுமியின் அவதாரமாக பசு விளங்குவதையும், இந்த கல்வெட்டு எடுத்துரைக்கிறது. இந்த கல்வெட்டில் மன்னருக்கும், ராணிக்கும் மேலாக, பசுவின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. கீழே மன்னரும், ராணியும், அதற்கும் கீழே படைத் தளபதியும் உள்ளனர். கப்பம் கட்டும் மன்னர்களும் பசுவை போற்றுவதை போல, மற்றொரு கல்வெட்டு உள்ளது. இதில் சேவகர்கள் மற்றும் போர் வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்த கல்வெட்டை சிலர், குங்கும பொட்டிட்டு, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


கல்வெட்டுகள், வட்டெழுத்துகள் குறித்து, ‘தினமலர்’ ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ண மூர்த்தியின் நுால்களை படித்து, பல தகவல்களை தெரிந்து கொண்டேன். 15ம் நுாற்றாண்டு கல்வெட்டு இங்கு இருப்பதை கண்டுபிடித்தேன். இந்த கல்வெட்டில், பசு தானம், பசுவை மக்கள் தெய்வமாக வழிபடுவது பற்றி விளக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் உள்ள உருவங்களில் உள்ளோரின் தலைமுடி, கொண்டை அமைப்பை காணும் போது, அவர்கள், நாயக்கர் மன்னர்களாக இருக்கலாம். அவர்கள், பசுவை வழிபடுவதற்காக இந்த கல்வெட்டை நிறுவியிருக்கலாம். இது குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வெட்டு ஆர்வலர் விஸ்வநாத தாஸ் கூறினார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கேரளாவில் சோழர் கால சாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு!... கேரளாவில் சோழர் கால சாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு! தமிழக எல்லையை ஒட்டிய கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழப் பேரரச...
தமிழகத்தில் கோவில் கட்டியதற்கான முதல் கல்வெட்டு கண... தமிழகத்தில் முதல் கோவில் கட்டியதற்கான கல்வெட்டு, திருவள்ளூர் மாவட்டம், சிற்றம்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் தான், மண், மர...
‘பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்... 'பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்' - தொல்லியல் அறிஞர்கள் வேதனை! 'பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பார...
மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, 14ம் நுாற்... மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, 14ம் நுாற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு! ஓசூர் அடுத்த தேன்கனிக் கோட்டை அருகே, மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்...
Tags: 
%d bloggers like this: