பேரிகை கைலாசநாதர் சிவன் கோவிலில் 14ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பேரிகை கைலாசநாதர் சிவன் கோவிலில் 14ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பேரிகை கைலாசநாதர் சிவன் கோவிலில் 14ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஓசூர் அடுத்த, பேரிகை கைலாசநாதர் சிவன் கோவிலில், 14ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விஜயநகர அரசனின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேரிகையில் உள்ள, சோழர் காலத்தை சேர்ந்த கைலாசநாதர் சிவன் கோவிலில், அறம் வரலாற்று ஆய்வு மைய குழு ஆய்வு செய்தது. அப்போது கோவில் சுவற்றில் செதுக்கப்பட்டிருந்த, கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது, 14ம் நூற்றாண்டை சேர்ந்த, விஜயநகர அரசன் வீர கம்பண்ணனின் கல்வெட்டு என, தெரிய வந்துள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


பேரிகை கைலாசநாதர் சிவன் கோவிலை, புனரமைப்பு பணிக்காக சுத்தம் செய்த போது, 14ம் நூற்றாண்டை சேர்ந்த விஜய நகர அரசன் வீர கம்பண்ணன் கல்வெட்டு, கோவில் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ளதை பார்த்தோம். இந்த கல்வெட்டை தொல்லியல் துறை இதுவரை பதிவு செய்யவில்லை. கல்வெட்டில் புதிய தகவல்கள் இருப்பதை அறிய முடிகிறது. தென்னக வரலாற்றில், மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக, இஸ்லாமிய படையெடுப்பில் இருந்து தென்னக பகுதியை காப்பாற்றியது மட்டுமின்றி, தென்னிந்திய பண்பாட்டையும், நாகரீகத்தையும் காப்பாற்றிய பெருமை விஜயநகர பேரரசுகளையே சாரும். கைலாசநாதர் சிவன் கோவில் கல்வெட்டில் குறிப்பிடும் அரசன் வீரகம்பண்ணன், கி.பி., 1352ல், முளுவாய் ராஜ்ஜியத்தின் மகா மண்டலேசுவரநாக பதவியேற்று, 1374ல், இறந்துள்ளார். பேரிகை சிவன் கோவிலில் கண்டறியப்பட்டுள்ள வீர கம்பண்ணன் கல்வெட்டு, 1371ல், செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் மேலும் சில ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு அறம் வரலாற்று ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: