ஒசூர் அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சுவர் நடுகல் கண்டெடுப்பு !

ஒசூர் அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சுவர் நடுகல் கண்டெடுப்பு !

ஒசூர் அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சுவர் நடுகல் கண்டெடுப்பு !

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே பாரந்தூர் கிராமத்தில் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சுவர் நடுகல்லும், கல்வெட்டும் கண்டறியப்பட்டுள்ளன :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாற்று ஆய்வாளர் அறம் கிருஷ்ணன் தலைமையில் பிரியன், மஞ்சுநாத், வீரமுத்து உள்ளிட்டோர் ஈடுபட்ட கள ஆய்வில் இந்த நடுகல்லையும், கல்வெட்டையும் கண்டறிந்துள்ளனர். இது, கிராமத்தை மீட்பதற்கு நிகழ்ந்த சண்டையில் இறந்து போன ஒரு போர் வீரனின் நடுகல் ஆகும். ஒசூரிலிருந்து தேன்கனிக் கோட்டை செல்லும் சாலையில் பதினைந்து கிலோ மீட்டர் பயணம் செய்தால், பாரந்தூர் கிராமம் வருகிறது. சாலையின் இடது புறத்தில் வெங்கடேசப்பா என்பவர் தனது விவசாய நிலத்தில் சிறு கோயில் போல் கட்டி இந்த நடுகல்லையும், கல்வெட்டையும் பாதுகாத்து வருகிறார். இதே இடத்தில் வேறு சில நடுகல்களும் உள்ளன. அதில், இரண்டு நடுகல்கள் பாம்பு கடித்து இறந்து போனவர்களின் நடுகல்லும், ஒன்று போரில் இறந்து போனவரின் நடுகல்லாகும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


மேற்குறிப்பிடும் நடுகல் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சுவர் நடுகல்லாகும். இக் கல்லில் மூன்று குதிரை வீரர்களால் போர் வீரன் ஒருவன் சூழப்பட்டு, வீரர்களுடனும் மூர்க்கத்தனமாக போர் செய்வது போல குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இக் கல்வெட்டில் சோழர் காலத்தில் தமிழக பகுதிகளை நிர்வாக வசதிக்காக பல மண்டலங்களாகப் பிரித்துள்ளதும், அவ்வாறு பிரிக்கப்படும் போது, தகடூரை முதலில் நிகரி சோழ மண்டலமாகவும், பின்னாளில் அது முடி கொண்ட சோழ மண்டலத்தில் உள்ள ராஜேந்திர சோழ வளநாடு என்றும், அதில் ஒசூரின் பழைய பெயர் முரசு நாடு என்றும், இடத்தைக் குறிப்பிடும் போது தென் கூற்றில் உள்ள வாரந்தூர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய பாரந்தூர், 13-ஆம் நூற்றாண்டில் வாரந்தூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. மேலும், பதிமிதேவன் என்பவர் வாரந்தூரைக் கைப்பற்றி அழிக்க முற்பட்ட போது, மேலையூரைச் சேர்ந்த மாரகாமிண்டனின் மகன் அவனைத் தடுத்து நிறுத்தி, போர் செய்து ஐந்து குதிரை வீரர்களை குத்திக் கொன்று, தானும் இறந்துள்ளான். வாரந்தூர் என்ற கிராமத்தை மீட்பதற்காக போரிட்டு இறந்துபோன வீரனுக்காக, 13-ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வைக்கப்பட்டதே இந்த நடுகல்லாகும். இப்போதும் இந்த நடுகல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஓசூர் அருகே 3,000 ஆண்டுக்கு முந்தைய கல்திட்டை கண்டுபிடிப்பு :

ஓசூர் அருகே 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல் திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாற்று ஆய்வாளர் அறம் கிருஷ்ணன் தலைமையில் பிரியன், மஞ்சுநாத், சிவா, காமராஜ், ஜெகன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் வரலாற்று கல்திட்டைகள், கல்வெட்டுகளை கண்டறிந்து வருகிறார்கள். ஓசூர் தாலுகா உத்தனப்பள்ளி அருகே தாசனபுரத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 50க்கும் மேற்பட்ட 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய நமது முன்னோர்களின் ஈமச்சின்னங்களான கல்திட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பகுதி மக்கள் கூறியதாவது :

இந்த கல்திட்டைகள் அனைத்தும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சுமார் 50க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், உள்ள கல் வட்டங்கள் ஒரு அடுக்கு முதல் 3 அடுக்கு வரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு அகழாய்வு செய்தால் புதிய வரலாற்று உண்மைகள் தெரிய வரும். இந்த பகுதியில் உள்ள கல்திட்டைகள் புதையலுக்காக தோண்டப்பட்டு, நமது முன்னோர்களின் வரலாற்று சின்னங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன. இதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: