தமிழறிஞர் எல்லிசு-சை மறைத்த திராவிட தேசியம்!

எல்லிசும் தமிழ் மொழிக் குடும்பமும்!!

எல்லிசும் தமிழ் மொழிக் குடும்பமும்!!

தமிழும், அதன் கிளை மொழிகளான கன்னடம், தெலுங்கு, மழையாளம், துளு போன்ற திராவிட மொழிகளும் முன்பு தமிழிய மொழிக் குடும்பமாகவே கருதப்பட்டு வந்ததுள்ளது.

கால்டுவல் காலத்திற்குப்பின் தான் அவை திராவிட மொழிக் குடும்பங்களாயின. கால்டுவலின் நூல் வெளிவருவதற்கு முன்பே 1852 வாக்கிலேயே, என்றி ஒய்சிங்டன் (Henry Hoisington) என்பவர் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளை தமிழே தோற்றுவித்தது என்ற கருத்தை முன் வைத்தார். 1816 வாக்கிலேயே ‘எல்லிசு’ (இயற்பெயர் – பிரான்சிசு வைட் எல்லிசு – Francis Whyte Ellis 1777-1819) தென்னிந்திய மொழிகள் தனி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை எனவும் அவைகளுக்கான மூலமொழி தமிழ் எனவும் கருத்துக் கொண்டிருந்தார். அதன்பின் 40 வருடம் கழித்துத்தான் (1856) கால்டுவல் திராவிட ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதினார். “தென்னிந்திய மொழிகள் ஒன்றோடொன்று உறவுடையன, சமற்கிருத செல்வாக்கு என்பது சொற்களில் உள்ளதே தவிர இலக்கணத்தில் இல்லை, இம்மொழிகள் எல்லாம் ஒரே வினையடிச் சொற்களை உடையவை, தமிழ் மற்ற மொழிகளுக்கு மூலம் என்ற கருத்துக்களை எல்லிஸ் முன் வைத்தார்” என்கிறார் தாமஸ் டிரவுட்மன்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

தமிழ் யாப்பியலை உள்ளடக்கிய நான்கு ஆய்வுரைகளை எழுத எல்லிசு திட்டமிட்டிருந்தார். அவை

1.தமிழ் பேசும் நாடுகளின் வரலாறு,
2.தமிழ்மொழி, அதன் பழைய, புதிய கிளை மொழிகள்,
3.தமிழ் யாப்பியல்,
4.தமிழ் இலக்கியம் ஆகியனவாகும்.

இந்த ஆய்வுரைகள் கிட்டத்தட்ட நிறைவுற்றதாகவும், சில திருத்தங்கள் மட்டும் செய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நான்கு ஆய்வுரைகளும் வெளி வந்திருக்குமானால் அவை எல்லிசுக்குப் பெரும் புகழை தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை என்கிறார் தாமஸ் டிரவுட்மன். தமிழும் அன்றே பெரும்புகழ் பெற்றிருக்கும். எல்லிசின் திட்டத்தின் மையப்பகுதியும் முதன்மை ஆய்வுரையும் தமிழ் மொழி குறித்தது ஆகும். ஆனால் அவை வெளி வரவில்லை.

எல்லிசு 1819இல் எதிர்பாராமல் தனது 41ஆவது வயதில் இறந்து போனார். இது தமிழுக்கும் தமிழர்க்கும் மாபெரும் இழப்பாகும். இவருடைய கையெழுத்துப் படிகள் துரோகிகளால் அடுப்பெரிக்கப் பயன்படுத்தப்பட்டன.

அவரது தமிழ் ஆய்வுகள் நூலாக வெளிவரவில்லை. எல்லிசின் ஆய்வு முடிவடைந்து நூலாக வெளி வந்திருக்குமானால் தமிழ் மொழிதான் தென்னிந்திய மொழிகளுக்கு மூலமொழி என்ற கருத்தும், தென்னிந்திய மொழிகள் தமிழிய மொழிக் குடும்பம் என்ற கருத்தும் நிலை பெற்றிருக்கும். அவர் மூலத்திராவிட மொழி குறித்தோ, திராவிடமொழிக் குடும்பம் குறித்தோ எதுவும் சொல்லவில்லை. எல்லிஸ் அவர்கள் கால்டுவலுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே தனது ஆய்வின் மூலம் இம்மொழிகளுக்கு மூலமொழி தமிழ்தான் என்பதைக் கண்டறிந்திருந்தார்.

உண்மையில் ‘திராவிடம்’ என்ற ஒரு மொழி இல்லை. தமிழ் என்ற சொல்தான் திரமிள, திரவிட என உருமாறி ‘திராவிடம்’ என்ற சொல்லாக ஆகியது. இன்று இக்கருத்துக்கள் பல மொழியியல் அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக உள்ளது. ஆகவே இம்மொழிகளுக்கு தமிழ்தான் மூலம் என்பதால் இம்மொழிக் குடும்பத்தை தமிழியமொழிக் குடும்பம் எனக்கொள்வதே பொருத்தமானதாகும்.

திராவிடத்தை சுட்டிக்காட்டிய தமிழகத்தில் தோன்றிய திராவிட அரசியல் கட்சிகளின் சூழ்ச்சி மற்றும் வஞ்சகத்தால் கால்டுவலினை மட்டும் தமிழ் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி, தமிழ் ஆய்வறிஞர் எல்லிசை இரட்டாடிப்பு செய்து வரலாற்றிலிருந்து மறையச் செய்தனர்.

உதவி : பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 77, 78..

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: