முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி!

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி!

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி!

கப்டன் அங்கயற்கண்ணி (10, மே, 1973 – ஆகஸ்ட் 16, 1994, கொக்குவில், மேற்கு – யாழ்ப்பாணம்) என்னும் இயக்கப் பெயர் கொண்ட துரைசிங்கம் புஸ்பகலா தமிழீழ விடுதலைப் புலிகளில் முக்கிய உறுப்பினராக இருந்து செயல்பட்டவர். முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆவார்.

கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரமரணமடைந்த நாளில் விடுதலைப் போராட்டத்தில் இவர் இணைந்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இவரிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. தொடக்கத்திலிருந்தே இவர் குழுத் தலைவியாக இருந்து வந்தார்.

விளையாட்டில் இவர் திறனுடன் விளங்கினார். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தார்.

கடற்புலிகள் மகளிர் படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றார்..

எட்டு மணித்தியாலம் இருபத்தேழு நிமிடங்களில் பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்தினார்.

வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின் போது லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருவராகக் கடற்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.

அங்கயற்கண்ணி ஆகஸ்ட் 16, 1994 இல் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடலில் இலங்கைக் கடற்படையினரின் கப்பல் படை மீதும் ‘டோறா’ விசைப்படகின் மீதும் கரும்புலித் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்தார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விம... விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல்! கட்டுநாயக்கா இலங்கையின் மேல் மாகாண நகரமான நீர்கொழும்பின் புறநகராகும். இங...
தேசியத் தலைவரால் “புயல்வீரன்” என்று அழைக்கப்பட்ட க... தேசியத் தலைவரால் “புயல்வீரன்” என்று அழைக்கப்பட்ட கானகனின் வீர வரலாறு! சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது! நெஞ்சம் உருகி வ...
மாவீரர் நாள் உருவான வரலாறு! – மேதகு. வே. பிர... மாவீரர் நாள் உருவான வரலாறு! - மேதகு. வே. பிரபாகரன்! மாவீரர் நாள் விழாவை உருவாக்கியது ஏன்? இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்க...
ஈழத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்ப... ஈழத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்பட்டது! தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களையும், பொதுமக்களையு...
Tags: