கீழடியில் அகழாய்வு பணி தீவிரம்!

கீழடியில் அகழாய்வு பணி தீவிரம்!

கீழடியில் அகழாய்வு பணி தீவிரம்!

சிவகங்கை மாவட்டம், கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் அகழாய்வு பணி தீவிரம் அடைந்துள்ளது.மதுரை அருகே உள்ள, கீழடியில், 2015ல், மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து, மூன்று கட்ட அகழாய்வு நடத்திய பின், அதை நிறுத்தியது. அகழாய்வு அதிகாரியை இடமாற்றம் செய்தது; அகழாய்வு பொருட்களை,

பெங்களூரு அகழாய்வுப் பிரிவுக்கு மாற்றியது; மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிக்கு, தாமதமாக அனுமதி வழங்கியது என, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.இந்நிலையில், ‘மத்திய தொல்லியல் துறை,இனி அங்கு அகழாய்வுப் பணியை செய்யாது’ என, அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழக தொல்லியல் துறையில் அகழாய்வு செய்ய, அனுமதி கிடைத்தது.இதையடுத்து, ஒரு வாரத்திற்கு முன், தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், ஏழு, தொல்லியல் அதிகாரிகளும், 100க்கும் மேற்பட்ட பணியாட்களும், அங்கு அகழாய்வுப் பணிகளை துவக்கினர்.இதுவரை, 10 குழிகள் தோண்டப்பட்டு, 2 அடி ஆழம் வரை, அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு தீவிரமடைந்துஉள்ள நிலையில், தொல் பொருட்கள் கிடைக்கும் என, தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: