திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 12ம் நூற்றாண்டு தடுப்பணை கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 12ம் நூற்றாண்டு தடுப்பணை கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 12ம் நூற்றாண்டு தடுப்பணை கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேற்கு எல்லையில் அமராவதியின் குறுக்கே கிராம மக்கள் கட்டிய கி.பி.12ம் நூற்றாண்டை சேர்ந்த தடுப்பணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு பற்றி தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூரத்தி கூறியதாவது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


திண்டுக்கல் மாவட்டம் மேற்கு எல்லைப் பகுதியில் ஓடுவது அமராவதி ஆறு. இந்த ஆற்றை சங்க காலத்தில் ஆன்பொருனை என்று அழைக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக கேரள எல்லையில் மஞ்சம்பட்டி அருகில் உற்பத்தி ஆகி 282 கி.மீ தூரம் பயணித்து காவிரியில் கலக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்கு எல்லையான சாமிநாதபுரத்தற்கு அருகில் ஆற்றின் குறுக்கே பழங்கால தடுப்பணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூரத்தி ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம் மற்றும் சேரல் பொழிவன் ஆகியோர் இந்த தடுப்பணையை கண்டுபிடித்துள்ளனர். தடுப்பணையின் அருகில் உள்ள கி.பி. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இந்த அணை கட்டப்பட்ட செய்தியை தெரிவிக்கிறது. பாறை மேல் அணையையொட்டி இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது. கொங்கு சோழ மன்னன் வரநாராயணனின் 16ம் ஆட்சி ஆண்டில் கி.பி..1157ல் இந்த அணையை கட்டி கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 6 வரிகளில் உள்ள இந்த கல்வெட்டு ஆற்றின் அருகில் உள்ள கடத்தூர் எனும் ஊரைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்று கூடி விவசாயத்திற்காக இந்த தடுப்பணையை கட்டிய செய்தியை தெரிவிக்கிறது. தடுப்பணையின் பெரும் பகுதி அழிந்து விட்ட நிலையல் எஞ்சிய பகுதிகள் இன்னும் அழியாமல் உள்ளன. அணையின் கிழக்குப் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு மதகு வாய்க்கால் இன்றளவும் அழியாமல் உள்ளது. இந்த வாய்க்கால் ஒரு அதிசயம் என்றே கூறலாம். ஏனெனில் பொதுவாக ஆற்றின் குறுக்கே அணை கட்டும் போதோ அல்லது மதகு வாய்க்கால் எடுக்கும் போதோ பாறாங்கற்களை அடியில் வைத்து அதன் மேல் செங்கற்களை வைத்து கட்டுவது வழக்கம். ஆனால் இங்கு செங்கற்களை அடியில் வைத்து அதன் மேல் பாறாங்கற்களை வைத்து மதகு வாய்க்கால் எடுக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் பழங்கால பொறியியலின் தொழில் நுட்பம் பற்றி வேறு பதிவு ஏதும் இல்லை.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: