நூற்றாண்டுகளுக்கு முந்தைய நடுகல் தேனியில் கண்டுபிடிப்பு!

100 ஆண்டுகள் முந்தைய நடுகல் கண்டுபிடிப்பு!

100 ஆண்டுகள் முந்தைய நடுகல் கண்டுபிடிப்பு!

நூற்றாண்டுகளுக்கு முன் முந்தைய நடுகல், சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சிலமலை சூலப்புரத்தில் கண்பிடிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடி அருகே சிலமலை ஊராட்சி கிராமத்திற்குட்பட்டது சூலபுரம். இங்கு விவசாய நிலங்களும், குதுவல் மண்ணும் அதிகம் இருக்கிறது. இப்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அதிகம் இருப்பதால் நீதிமன்ற உத்தரவின்படி சிலமலை கிராம பஞ்சாயத்து மூலமாக அவற்றை அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


குதுவல் மண் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிக் கொண்டிருக்கும் போது முந்தைய கால நடுகல் ஒன்று இருந்ததை பணியில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடித்தனர். அந்த கல்வெட்டினை எடுத்து பார்த்த போது செவ்வக வடிவில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததை கண்டனர்.

குறிப்பாக வைகாசி மாதம் என்றும் போடயநாயக்கர் சூலப்புரம் எனவும், தெளிவாக தெரிந்ததது. விவசாயி கூறுகையில், இந்தக் கல் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய நடுகல்லாக தெரிகிறது. வீரர்கள் நினைவாக ஊன்றப்பட்ட நடுகல்லாக இருக்கலாம்.

மற்றொரு பக்கம் பார்த்த போது எழுத்துகள் தெளிவாக தெரியாததால் எதுவும் புரியவில்லை. இதையடுத்து, வரலாற்று துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

அரச குல பெண்கள் போர் செய்யும் வகையில், சித்தரிக்கப... அரச குல பெண்கள் போர் செய்யும் வகையில், சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல்: தமிழகத்தில் முதன்முறையாக கண்டுபிடிப்பு! ஓசூர், தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ள...
தேன்கனி கோட்டையில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டு... தேன்கனி கோட்டையில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகண்டுபிடிப்பு! கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனி கோட்டையில், பழங்கால வரலாற்று சான்றுகளை விவரிக்கும், 13ம் நு...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 12ம் நூற்றாண்டு தட... திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 12ம் நூற்றாண்டு தடுப்பணை கண்டுபிடிப்பு! திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேற்கு எல்லையில் அமராவதியின் குறுக்கே கிராம ...
230 ஆண்டுகளுக்கு முன்பே ‘சென்னாபட்டிணம̵்... 230 ஆண்டுகளுக்கு முன்பே 'சென்னாபட்டிணம்' பற்றிய குறிப்பு கண்டுபிடிப்பு! A bridge back to Chennapattinam Amid tense office goers waiting for their r...
Tags: