1,100 ஆண்டுகள் பழமையான சமணர் கோவிலை புதுப்பிக்க முடிவு!

1,100 ஆண்டுகள் பழமையான சமணர் கோவிலை புதுப்பிக்க முடிவு!

1,100 ஆண்டுகள் பழமையான சமணர் கோவிலை புதுப்பிக்க முடிவு!

திருப்பூர் அருகேயுள்ள, பழமையான சமணர் கோவிலை, புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவினாசி-புளியம்பட்டி சாலையில் உள்ள ஆலத்துாரில், 1,100 ஆண்டுகள் பழமையான அமணீஸ்வரர் கோவில் உள்ளது.

சிற்ப வேலைப்பாடுகள் :

பல நுாற்றாண்டுகளுக்கு முன், மைசூர் பகுதியில் இருந்து, வணிக பெரு வழியில் வந்த சமண மதத்தினர், ‘வீரசங்காக பெரும்பள்ளி அணியாதழகியார்’ என்ற சமண கோவிலை அமைத்தனர். காலப்போக்கில் அமணீஸ்வரர் கோவிலாக பெயர் மருவியுள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில், முழுவதும் கற்களால், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட இக்கோவில், தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. சமணர்களின் வாழ்வியல் நுட்பங்கள், கல்விச் சேவை, கொங்கு சோழர்கள் பலர் திருப்பணி செய்தது, பழமையான வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் மூலம் ஏராளமான செய்திகளை தாங்கியிருந்த இக்கோவில், அடையாளத்தை இழந்து வருகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


தொல்லியல் துறை :

இதையடுத்து, பழமை மாறாமல், இக்கோவிலை மீட்க, கோவையைச் சேர்ந்த அகிம்சை நடை குழுவினர், தமிழ் சமணர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். தொல்லியல் துறை அறிஞர், வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் கோவையைச் சேர்ந்த சமணர்கள், தொல்லியல் ஆர்வலர்கள், ஆலத்துார் சென்று, கோவிலை பார்வையிட்டனர். கிராம மக்களிடம் பேச்சு நடத்தி, தொல்லியல் துறை அனுமதி பெற்று, விரைவில் கோவிலை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளனர். இக்கோவிலில், சமணர்களுக்கும், தமிழர்களுக்கும் இருந்த தொடர்பு, கலாசாரம், நிர்வாக அமைப்புகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. ‘கோவிலை, தொல்லியல் துறை அனுமதியுடன், பழமை மாறாமல் புதுப்பித்து, வழிபாடு நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.’ என்றனர்.

  • தினமலர்

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

பாழடைந்து வரும் 1,100 ஆண்டு வரலாறு சமணர் கோவில் அழ... திருப்பூர் அருகே, 1,100 ஆண்டுகள் பழமையான சமணர் கோவில், எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. புராதன சின்னமான இக்கோவிலை புதுப்பித்து பாதுகாக்க...
தொண்டி சமண பள்ளி பாரம்பரிய சின்னமாகுமா ஒன்பதாம் நூ... தொண்டி சமண பள்ளி பாரம்பரிய சின்னமாகுமா ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ! 'ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, சுந்தரபாண்டியன் பட்டினத்தில் உள்ள, ஒன்பதா...
சித்தன்னவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை !... சித்தன்னவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை ! சித்தன்னவாசல், இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை...
காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாறு !... காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாறு ! இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் ...
Tags: 
%d bloggers like this: