குடிமக்களை பெருமைப்படுத்தும் புலிகுத்தி நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

குடிமக்களை பெருமைப்படுத்தும் புலிகுத்தி நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

குடிமக்களை பெருமைப்படுத்தும் புலிகுத்தி நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

குடிமக்களை பெருமைப்படுத்தும் வகையில், புலியை குத்திக் கொன்ற வீரனுக்காக, மன்னர்கள் வெளியிட்ட அரிய நாணயம் கிடைத்துள்ளது. இது, வரலாற்றின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து, நாணயவியல் ஆய்வாளர், கூறியதாவது:

நாணயங்கள், வரலாற்றின் முக்கிய சாட்சிகளாக உள்ளன. தமிழகத்தில், கடவுள், ராசி, சின்னங்கள், விலங்குகளின் உருவங்களுடன் பல நாணயங்கள் கிடைத்துள்ளன. இவை, முற்கால அரசர்களின் மத நம்பிக்கை மற்றும் மக்களின் வழிபாடுகளை நமக்கு தெரிவிக்கின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தஞ்சை மன்னர்கள் சில மாதங்களுக்கு முன், நாணயக் கண்காட்சி ஒன்றில், கரூரைச் சேர்ந்த வணிகரிடம் இருந்து, தஞ்சை பகுதி நாணயம் ஒன்றை வாங்கினேன். அதன் முன்புறம், ஒரு வீரன் காலை மடக்கிய நிலையில், தன்னை நோக்கி பாயும் புலியை எதிர்த்து சண்டை போட்டு, அதன் வயிற்றுக்குள் கத்தியை பாய்ச்சும் காட்சி உள்ளது.

நாணயத்தின் பின்புறத்தில், நடுவில் ஒரு குத்துவாள், அதன் மேலும் கீழும், ‘ராம ரா’ என, நாகரி வடிவில், எழுதப்பட்டு உள்ளது. எழுத்துகள் பாதி அளவே தெரிகின்றன. வீரனின் வீரத்தை போற்றவோ, முன்பே இறந்து வழிபடும் தெய்வமாக மாறிய, ஒரு புலிகுத்தியின் நினைவாகவோ, இந்த நாணயத்தை, தஞ்சையை ஆண்ட மன்னர்கள், வெளியிட்டு இருக்கலாம்.

புலிகுத்தி நடுகல் :

இந்த நாணயக் காட்சியைப் போலவே, தமிழகத்தில், புலிகுத்தி பட்டான் நடுகற்கள் நிறைய உள்ளன. புலியுடன் மோதி உயிர்விடும் வீரனின் சந்ததியினர், புலிகுத்தி என்ற சிறப்பு பெயரை, தங்கள் பெயரின் முன் சேர்த்து உள்ளனர்.

கொங்கு பகுதியில், இவ்வழக்கம் மிகுதியாக உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் சிறைபிடிக்கப்பட்ட பின், ஊமைத்துரைக்கு உதவிய, ‘புலிகுத்தி நாயக்கர்’ என்பவரின் பெயர், இதற்கு உதாரணம். புலிகுத்தி வீரனின் நடுகற்களை, இன்றும் நீத்தார் நினைவாக மக்கள் வழிபடுகின்றனர். அவற்றிற்கு கோவில்கள் இல்லை. அரிதாக, ஈரோடு மாவட்டம், காஞ்சிக் கோவிலில் உள்ள, சீதேவி அம்மன் கோவில் பிரகாரத்தில், புலிகுத்தி கல் உள்ளது. கி.பி., எட்டாம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ் வட்டெழுத்துக்களுடன் கூடிய புலிகுத்தி கல் ஒன்று, 2014ல், திருப்பூர் அருகே, கவுண்டம் பாளையத்தில் கிடைத்தது. இது புலிகுத்தி கற்கள் ஆய்வில், முக்கியமானதாக கருதப்பட்ட நிலையில், புலிகுத்தி நாணயம், அவ்வகை ஆய்வுக்கு மேலும் உதவும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: