திருச்சி அருகே மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் ராஜேந்திரன் சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் திருவெறும்பீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 6 நூற்றாண்டிலிருந்தே கல்வெட்டுகள் கிடைக்கின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


இந்நிலையில், முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர் ஆர்.அகிலா, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் டாக்டர் எம்.நளினி ஆகியோர் திருச்சி திருவெறும்பூர் திருவெறும்பீஸ்வரர்ர் கோயில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஆய்வில், குறிப்பிட்ட இந்த கோயிலில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு சோழர் கால கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளனர். 10 – 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டு மூன்றாம் ராஜேந்திரன் காலத்தில் பொறிக்கப்பட்டது. இந்த கல்வெட்டில் அப்பகுதியில் சோழர் காலத்தில் இரண்டு சைவ மடங்கள் இருந்தது என்றும் அந்த மடங்களுக்கு மாணியமாக நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு ஆய்வு சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்றதாக கல்வெட்டுகளைக் கண்டுபிடித்த வரலாற்று பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தொப்பூர் அருகே கால்நடைகளின் நோயை தீர்த்த சன்னியாசி... தொப்பூர் அருகே கால்நடைகளின் நோயை தீர்த்த சன்னியாசி நடுகல் கண்டுபிடிப்பு! தொப்பூர் அருகே கால்நடைகளின் நோய் தீர்த்த சன்னியாசி நடுகல்லை வரலாற்று ஆய்வாள...
மதுரையில் பாண்டியர் கால சிலைகள் கண்டுபிடிப்பு! ... மதுரையில் பாண்டியர் கால சிலைகள் கண்டுபிடிப்பு! - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை! பாண்டியர் காலத்து கடவுள் சிலைகள் மதுரை அருகே கண்டெட...
சேலம் அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண... சேலம் அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு! கோவிலில் வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கு, 'புண்ணாக்கு' பிரசாதம் வழங்கியதற்கு ஆதாரமா...
உடன் கட்டை ஏறும் சிற்பம் போர் வீரன் நடுகல் கண்டுபி... உடன் கட்டை ஏறும் சிற்பம் போர் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு! ஆரணி அருகே, உடன் கட்டை ஏறும் சிற்பம் மற்றும் போர்வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தி...
Tags: 
%d bloggers like this: