கறுப்பு ஜீலை கலவரத்திற்கு அடிகோலியது திருநெல்வேலி தாக்குதலா?

கறுப்பு ஜீலை கலவரத்திற்கு அடிகோலியது திருநெல்வேலி தாக்குதலா?

கறுப்பு ஜீலை கலவரத்திற்கு அடிகோலியது திருநெல்வேலி தாக்குதலா?

திருநெல்வேலி தாக்குதல் அல்லது Four Four Bravo என்பது ஜீலை 23, 1983 அன்று கடமையில் இருந்த 15 பேர் கொண்ட இலங்கை இராணுவ சுற்றுக்காவல் செய்பவர்களின் அழைப்புக் குறியீடாகும். இச்சுற்றுக் காவல் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் கறுப்பு ஜீலை கலவரத்திற்கு அடிகோலி ஈழப்போரை ஆரம்பித்து வைத்ததென சிலரால் கருதப்படுகின்றது. கறுப்பு ஜீலை திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட முறையும் அளவும் அதற்கு அரச தரப்பில் இருந்த ஆதரவும் அதனை வெறும் பழித் தாக்குதலாகக் கருத முடியாது. அதன் பாரிய விளைவுகளே ஈழப்போரின் ஒரு முக்கிய காரணம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நேரடியாகவே பங்கேற்று நடத்திய முதலாவது மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வு விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் கொல்லப்பட்டார்.

வரலாறு :

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான படையினர் கொல்லப்பட்டது இத்தாக்குதலில் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் அணித் தளபதி லெப்டினன்ட் சீலன், ஆனந்த் ஆகியோர் இறந்த 8 ஆம் நாளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இலங்கை இராணுவம் தனக்கு சிம்ம சொப்பனமாக இருந்து லெப்டினன்ட் சீலன் கொல்லப்பட்ட தாக்குதலை ஒரு பெரும் படை நடவடிக்கையாகவே மேற்கொண்டது. அப்போது யாழ்ப்பாணப் படைத் தலைமையகமாக இயங்கிய குருநகர் இராணுவ முகாமில் வைத்து அப்போதைய யாழ். சிறிலங்கா படைத் தளபதி பிரிகேடியர் பல்தசார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் அடுத்த தாக்குதல் இலக்கு குருநகரில் வைத்து திட்டமிடப்பட்டது.

இதன்படி பலாலிப் பகுதியில் இருந்து ஒரு இராணுவ அணியும் குருநகரில் இருந்து ஒரு இராணுவ அணியும் நகர்ந்து விடுதலைப் புலிகளைத் தாக்குவது அவர்களின் திட்டம். பலாலியில் இருந்து நகரும் அணிக்கு போ போ பிராவோ என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது.

குருநகர் அணிக்கு ‘போர் போர் சாளி’ (Four Four Bravo) என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது. இதில் Four Four Bravo அணி வாகனத்தில் வந்தபோது விடுதலைப் புலிகள் திருநெல்வேலி-பலாலி வீதியிலுள்ள தபால் பெட்டிச் சந்தியில் வைத்து கண்ணிவெடி மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தினர். இதில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் வே. பிரபாகரன், லெப். கேர்ணல் கிட்டு, லெப். கேர்ணல் விக்டர், லெப். கேர்ணல் பொன்னம்மான், லெப் கேர்ணல் அப்பையா அண்ணை, மேஜர் கணேஸ் உட்பட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: