சோழர் வரலாறாய் வாழும் ஆத்தி மரங்கள்!

சோழர் வரலாறாய் வாழும் ஆத்தி மரங்கள்!

சோழர் வரலாறாய் வாழும் ஆத்தி மரங்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம கோவில்களில், தலவிருட்சமாக உள்ள, ஆத்தி மரங்களுக்கும், சோழர்களுக்கும் தொடர்பு இருந்ததாக, ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

சேர, சோழ, பாண்டியருக்கு, வில், புலி, மீன் சின்னங்கள் இருந்தது போல, போந்தை என்ற பனம்பூ; ஆர் என்ற ஆத்திப்பூ, வேப்பம்பூ ஆகியவையும், மூவேந்தர் அடையாள பூக்களாக விளங்கின. இவற்றில், ஆத்தி மரங்கள் மட்டும், தற்போது குறைந்து விட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


ஆனாலும், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே உள்ள மேலக்கன்னிசேரி, நிறைகுளத்து அய்யனார் கோவில், ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை, வீரமாகாளி கோவில் உள்ளிட்ட சில கிராம கோவில்களில், ஆத்தி மரங்கள் கோவில் மரங்களாக, பல நுாற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

அவற்றை ஆய்வு செய்த, ராமநாதபுரம், தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய தலைவர், வே.ராஜகுரு, செயலர், காளிமுத்து, கமுதி ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப் பாண்டியன் ஆகியோர், இம்மரங்களுக்கும், சோழர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிவித்துள்ளனர்.

சோழர்கள், கிராமங்களை இணைத்து, நாடு, மண்டலம் என்ற பிரிவுகளாக்கி, நிர்வாகம் செய்து வந்தனர். சோழர்களின் ஆட்சியில், ராமநாதபுரம் மாவட்டத்திலும், கீழ்ச்செம்பி நாடு, வடதலைச் செம்பி நாடு, ஏழூர் செம்பி நாடு, மதுராந்தக வளநாடு போன்ற நாடுகள் உருவாக்கப்பட்டன.

பிற்கால சோழர் ஆட்சியில், வணிகம், நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களுக்காக, ராமநாதபுரம் பகுதியில், சோழநாட்டு மக்கள் குடியேறினர். அப்போது, ஆத்தி மரங்களை, கோவில் மரங்களாக வளர்த்தனர். அவை இன்றும், அவ்வாறே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது, பாண்டிய நாட்டில் உள்ள ஆத்தி மரங்கள், சோழர்கள் விட்டு சென்ற அடையாள சின்னங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மருத்துவச் சிறப்புகள் :

தலைவலி, காய்ச்சல், தோல் நோய்கள், வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு மருந்தாக, ஆத்தி மர பட்டையும், வலி நிவாரணியாக இலைகளும் பயன்படுகின்றன. வயிற்றுப் புண்ணுக்கு, ஆத்தி பூ மொட்டுகள் மருந்தாகின்றன.

ஆத்தி மரத்தின் அமைப்பு :

‘பாகினியா ரசிமோசா’ என்ற, தாவரவியல் பெயர் கொண்ட ஆத்தி மரம், கருமை, சொரசொரப்பு, கோணல்மாணலான தண்டு, ஆட்டு குளம்பு போன்ற இலை, வெளிர் மஞ்சள் நிற பூ, தகடு போன்ற திருகலான காய்களை கொண்டிருக்கும். மார்ச், ஏப்ரலில் பூத்து, ஆகஸ்ட் முதல், பிப்ரவரி மாதம் வரை காய்க்கும்.

இலக்கியங்களில் ஆத்தி :

குறிஞ்சிப்பாட்டில், 67வது மலராக கபிலரும், நலங்கிள்ளி – பெருங்கிள்ளி போரில், இருவரும் ஆத்தி மலர் சூடியதாக, கோவூர் கிழாரும் கூறுகின்றனர். தலைமாலையாக ஆத்தியை சூடிய, கரிகால் வளவனின் அழகை, பொருநர் ஆற்றுப்படை கூறுகிறது. ஆர்க்காடு, திருவாரூர், ஆர்ப்பாக்கம் உள்ளிட்ட பல ஊர்கள், ஆத்தி மரத்திற்கும், சோழர்களுக்குமான தொடர்பை உணர்த்துகின்றன.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் வரலாறு!... 2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் வரலாறு! திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தி...
1000 ஆண்டுகள் வரலாறு பேசும் பொந்தன் புளி மரங்கள்!... 1000 ஆண்டுகள் வரலாறு பேசும் பொந்தன் புளி மரங்கள்! 'ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை சுமந்தபடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழும், பொந்தன் புளி மரங்களை பாதுகாக...
கழுமர வழிபாடு: ஆய்வில் அசத்திய ஒன்பதாம் வகுப்பு மா... கழுமர வழிபாடு: ஆய்வில் அசத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவி! மதுரை மாவட்டத்தில் உள்ள கழுமர வழிபாடு பற்றியும், ராமநாதபுரம் மாவட்டம், பள்ளபச்சேரி, கோவிந்தன்...
தமிழகத்தில் உள்ள நதிகள்! படித்தால் மலைத்துப் போவீர... தமிழகத்தில் உள்ள நதிகள்! படித்தால் மலைத்துப் போவீர்கள்... 1. கடலூர் மாவட்டம் : தென்பெண்ணை, கெடிலம், வராகநதி, மலட்டாறு, பரவனாறு, ...
Tags: 
%d bloggers like this: