புதிய கற்கால ஆயுத பட்டறை வேலூர் அருகே கண்டுபிடிப்பு!

புதிய கற்கால ஆயுத பட்டறை வேலூர் அருகே கண்டுபிடிப்பு!

புதிய கற்கால ஆயுத பட்டறை வேலூர் அருகே கண்டுபிடிப்பு!

வேலுார், சத்துவாச்சாரி மலை அடிவாரத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுத பட்டறை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வேலுார் அரசு அருங்காட்சியகத்தின் ஓய்வு பெற்ற காப்பாட்சியர் கூறியதாவது:


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

வேலுார், சத்துவாச்சாரியில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே, குன்றுகள் சூழ்ந்த இடத்தில், மழைநீர் ஓடையாக செல்கிறது. இங்கு இயற்கை குகை அமைந்திருக்கிறது. இந்த குகையில், புதிய கற்கால மக்கள், தங்கி வாழ்ந்திருக்க வேண்டும்.

இந்த குகையின் மேற்பரப்பில், 70 சிறு பள்ளங்கள் காணப்படுகின்றன. இவற்றில், புதிய கற்கால மக்கள், கற்களை தேய்த்து, கற்கருவிகளான, கைக்கோடாரி உள்ளிட்டவற்றை செய்திருக்கின்றனர். இது போன்ற, புதிய கற்கால ஆயுத பட்டறைகள், ஜவ்வாது மலையில், கீழானுார்; கர்நாடகாவில் சந்தனகல்லு என்ற இடத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. கீழானுாரில் இருப்பதைப் போலவே, சத்துவாச்சாரியிலும், புதிய கற்கால ஆயுத பட்டறை, ஓடையின் கரையில் அமைந்திருக்கிறது. புதிய கற்கால மக்களுக்கு, இரும்பின் பயன்பாடு தெரியாததால், பாறை மீது கற்களை தேய்த்து வழவழப்பாகச் செய்து, கல் ஆயுதங்களை தயாரித்துள்ளனர். காடு மற்றும் சமவெளிப் பகுதிகளில், பூமியைத் தோண்டி கிழங்குகளை எடுக்கவும், மற்ற வேலைகளுக்கும், இவற்றை பயன்படுத்தினர். புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள், தற்சமயம் இங்கு கிடைக்கவில்லை. எனினும், அவற்றை ஓடையில் வீசி எறிந்திருக்கலாம்.மழைநீரில் அவை அடித்துச் செல்லப்பட்டு, ஓடையின் மணலில் மறைந்திருக்க வாய்ப்புகள் உண்டு.எனினும், வேலுார் வட்டார பகுதியில், புதிய கற்கால கல் ஆயுதங்கள் கிடைத்திருக்கின்றன.எனவே, சத்துவாச்சாரி மலை அடிவாரத்தில், ஓடையின் மேற்கு கரையில், புதிய கற்கால ஆயுதங்கள் செய்யும் பட்டறை இருந்திருக்கிறது என்பது உறுதி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

திருப்பூர் அருகே சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு... திருப்பூர் அருகே சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு! திருப்பூர் அருகே, பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வரும், சமணர் கோவிலில் புதிய தெ...
போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுப... போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுபிடிப்பு! போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் முந்தல் கிராமத்துக்கு அருகே கீழச்சொக்கையா கோவில் உள...
ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள... ஏற்காட்டில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு, வரலாற்று ஆய்வு மையக் குழுவினர் தலைமையிலானோர், மாரமங்கலம், அரங்கம...
ஓசூர் அருகே 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டு... ஓசூர் அருகே 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு! கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர் பேட்டை பகுதியில், நடுகல் புதைந்திருப்பதாக, கிருஷ்ணகிரி ம...
Tags: