கீழடி கண்மாயில் பழைமையான உறை கிணறு கண்டுபிடிப்பு!

கீழடி கண்மாயில் பழைமையான உறை கிணறு கண்டுபிடிப்பு!

கீழடி கண்மாயில் பழைமையான உறை கிணறு கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பசியாபுரம்-கீழடி சந்திப்பு பகுதியில் உள்ள நான்கு வழிச் சாலை அருகே கீழடி கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் அப்பகுதி பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, பழைமையான கிணறு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து கீழடி பள்ளிச் சந்தை புதூரில் அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழக தொல்லியல் துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அங்கு வந்த தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள் உறை கிணற்றை ஆய்வு செய்தனர். கீழடி அகழாய்வில் ஏற்கெனவே கிடைத்த உறை கிணற்றின் சம காலத்தை ஒட்டிய சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான உறை கிணறு என்பது ஆய்வில் தெரியவந்தது.

மேலும், அதனை முழுமையாக தோண்டி ஆய்வு செய்தபோது, ஏற்கெனவே கீழடி அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்ட உறை கிணற்றை விட இந்த கிணறு பல்வேறு வகைகளில் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அந்த கிணற்றுக்குள் சில மண்பாண்ட பொருள்களும் இருந்தன. இதனால், இந்த பகுதி முழுவதும் பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் மேடு பகுதியாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் பயன்படுத்திய தாழ... 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிப்பு! திண்டுக்கல் அருகே 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, பழங்கால மக்கள் பயன்படுத்திய தாழி கண்...
சேலம் அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்... சேலம் அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு! சேலம் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்...
அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுப... அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுபிடிப்பு! தமிழகம் கொண்டுவர நடவடிக்கை! நாகை மாவட்டத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்க...
நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிப்பு!... நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிப்பு! நாயக்கர் காலத்திய சதி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமி...
Tags: