கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் குழாய் கண்டுபிடிப்பு!

கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் குழாய் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி முதல் நடைபெறுகிறது. 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதுவரை மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் மக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. மேலும் அதிகளவில் சுவர்களும் கிடைத்துள்ளன.

2 நாட்களுக்கு முன்பு செங்கற்களால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. சுடுமண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: