நகை வர்த்தகத்தில் ‘பண்டைய தமிழர்கள்’!

நகை வர்த்தகத்தில் 'பண்டைய தமிழர்கள்'!

நகை வர்த்தகத்தில் ‘பண்டைய தமிழர்கள்’!

”பண்டைய தமிழர்கள், கலைநயம் மிக்க தங்க நகைகளை தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்தனர்,” என, தஞ்சை தமிழ் பல்கலையின், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை தலைவர், ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னை பல்கலையின், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில், பேராசிரியர் பாலகிருஷ்ண நாயர் நினைவு சொற்பொழிவு நேற்று நடந்தது. அதில், ‘கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில், தமிழர்களின் தெற்காசியா மற்றும் சீனாவுடனான, வணிகத் தொடர்புகள்’ என்ற தலைப்பில், பேராசிரியர் ஜெயகுமார் பேசியதாவது: கி.மு., 500 முதல், கி.பி., 17ம் நுாற்றாண்டு வரை, தொடர்ச்சியாக, தென் கிழக்கு, மத்திய ஆசியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வணிகத் தொடர்பில் இருந்துள்ளதை, அங்கு கிடைக்கும் கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன. குறிப்பாக, பாரூஸ், தக்குவாபா, மியான்மர் கல்வெட்டுகளிலும், சீனாவின், தவ் – இ – ஜிலுவில் காணப்படும் கல்வெட்டு தரவுகளின் படி, தமிழர்கள், மெல்லிய துணிகள், முத்துக்கள், பவளங்கள், யானைகள், தங்க நகைகள், வாசனை திரவியங்களை ஏற்றுமதி செய்தனர். தாய்லாந்து, இந்தோனேஷியா, மியான்மர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இரும்பு பொருட்களை இறக்குமதி செய்துள்ளனர். சீனாவுக்கு, கடாரம் வழியே, மறைமுக வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். சீனாவில் இருந்து, தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: