நகை வர்த்தகத்தில் ‘பண்டைய தமிழர்கள்’!

நகை வர்த்தகத்தில் 'பண்டைய தமிழர்கள்'!

நகை வர்த்தகத்தில் ‘பண்டைய தமிழர்கள்’!

”பண்டைய தமிழர்கள், கலைநயம் மிக்க தங்க நகைகளை தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்தனர்,” என, தஞ்சை தமிழ் பல்கலையின், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை தலைவர், ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னை பல்கலையின், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில், பேராசிரியர் பாலகிருஷ்ண நாயர் நினைவு சொற்பொழிவு நேற்று நடந்தது. அதில், ‘கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில், தமிழர்களின் தெற்காசியா மற்றும் சீனாவுடனான, வணிகத் தொடர்புகள்’ என்ற தலைப்பில், பேராசிரியர் ஜெயகுமார் பேசியதாவது: கி.மு., 500 முதல், கி.பி., 17ம் நுாற்றாண்டு வரை, தொடர்ச்சியாக, தென் கிழக்கு, மத்திய ஆசியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வணிகத் தொடர்பில் இருந்துள்ளதை, அங்கு கிடைக்கும் கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன. குறிப்பாக, பாரூஸ், தக்குவாபா, மியான்மர் கல்வெட்டுகளிலும், சீனாவின், தவ் – இ – ஜிலுவில் காணப்படும் கல்வெட்டு தரவுகளின் படி, தமிழர்கள், மெல்லிய துணிகள், முத்துக்கள், பவளங்கள், யானைகள், தங்க நகைகள், வாசனை திரவியங்களை ஏற்றுமதி செய்தனர். தாய்லாந்து, இந்தோனேஷியா, மியான்மர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இரும்பு பொருட்களை இறக்குமதி செய்துள்ளனர். சீனாவுக்கு, கடாரம் வழியே, மறைமுக வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். சீனாவில் இருந்து, தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழ் இருக்கைக்குக் கரம் கொடுத்த 7,335 தமிழர்கள்! ... தமிழ் இருக்கைக்குக் கரம் கொடுத்த 7,335 தமிழர்கள்! - ஹார்வர்டு ஒப்பந்தத்தில் இடம்பெறப் போவது என்ன? ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான முழுப் பணமும் சேர்ந்த...
கி.பி., 1- மற்றும் 2-ம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ்... கி.பி., 1- மற்றும் 2-ம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ் 'பிராமி' எழுத்து பொருட்கள் கண்டுபிடிப்பு! மதுரை மாவட்டம், கவச கோட்டையில் நடந்த ஆய்வில், கி.பி., 1...
தெலுங்கர் ஒருவரை யாழ்ப்பாண துணைத் தூதுவராக இந்திய ... முதல் தடவையாக தமிழர் அல்லாத ஒரு தெலுங்கர் ஒருவரை யாழ்ப்பாண துணைத் தூதுவராக இந்திய அரசு நியமிக்கிறது! யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவராக இதுவரை ச...
தமிழரின் வீர விளையாட்டுக்கள்!... தமிழரின் வீர விளையாட்டுக்கள்! காதலும் வீரமும் தமிழர் வாழ்வின் அடிப்படை. மல்லராகவும் மறப்பண்பு உடையோராகவும் வீரப் பற்று மிக்கோராகவும் தமிழர்கள் விளங்...
Tags: 
%d bloggers like this: