காவேரிப்பட்டணம் அருகே கி.பி.1407-ம் ஆண்டில் பொறிக்கப்பட்ட விஜயநகர கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

காவேரிப்பட்டணம் அருகே கி.பி.1407-ம் ஆண்டில் பொறிக்கப்பட்ட விஜயநகர கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

காவேரிப்பட்டணம் அருகே கி.பி.1407-ம் ஆண்டில் பொறிக்கப்பட்ட விஜயநகர கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

காவேரிப்பட்டணம் அருகே போத்தபுரம் என்ற இடத்தில் விஜயநகர காலத்து கல்வெட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தபுரம் கிராமத்தில் பெரிய கற்பலகை உள்ளதாக, அக்கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் கிருஷ்ணகிரி அருங்காட்சியக அலுவலகத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் கல்வெட்டை ஆய்வு செய்தனர். ஆய்வில் அக்கல்வெட்டு விஜயநகர கால கல்வெட்டு என்பதைக் கண்டறிந்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தென்னிந்திய வரலாற்றில் விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் முளுவாய் என்பது கர்நாடகத்தில் முளுபாகல் என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு கோலார், சித்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

தற்போது கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டு கி.பி.1406 முதல் கி.பி.1422 வரை ஆட்சி செய்த விஜயநகர மன்னர் முதலாம் தேவராயனின் ஆட்சிக் காலத்தில் கி.பி.1407-ம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பிராமணர்களுக்கு பையூர் பற்றின் வரதசமுத்திரம் என்ற பகுதியில் தானமாக வழங்கப்பட்ட பிரமதேய நிலம், அதன் எல்லைகள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலப்பரப்பானது 19 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 2 பாகங்கள் கோயிலுக்கும், 16 பாகம் பல்வேறு கோத்ரங்களைச் சேர்ந்த பிராமணர்களுக்கும் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. இத்தானத்தை பையூர் சீமையை நாயக்கம் செய்து வந்த ஒருபரி நாயக்கர் என்பவரின் மகன் இம்மடி நாயக்கர் என்பவர் வழங்கியுள்ளார். இவர்களது முன்னோர்களாக காடைய நாயக்கர் என்பவரும் அவரது மகன் வரதய நாயக்கர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கும் மூவராயன், பாஷைக்குத் தப்புவராயன், கண்டன், ஆவகதாற்று மண்டலீகன் போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டிருப்பதால் விஜயநகர ஆட்சியில் இவர்களும் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்பதை அறிய முடிகிறது. இதுவரை கூளிமாராய நாயக்கன், பொம்மைய நாயக்கன், திம்மைய நாயக்கன் போன்ற ஒரு சிலரைப் பற்றி மட்டுமே கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

தற்போது கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டு வாயிலாக காடைய நாயக்கர், வரதய நாயக்கர், ஒருபரி நாயக்கர், இம்மடி நாயக்கர் ஆகியோரின் வரலாறு தெரிய வந்துள்ளது. இவ்வாறு காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

  • தி இந்து
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: