ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

போச்சம்பள்ளி அருகே, ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, கன்னட தூண் கல்வெட்டை, வரலாற்றுத்துறை ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, ஐகொத்தப்பள்ளி கிராமத்தில், செல்லியம்மன் கோவில் அருகே, விவசாய நிலத்தில், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, கன்னட தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: நுளம்பர் என்னும், அரசு மரபினர் கி.பி., 8ம் நூற்றாண்டு முதல், 11ம் நூற்றாண்டு வரை, கர்நாடகம், ஆந்திரா மற்றும் தமிழகத்தில், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். அதில், நுளம்ப மன்னன், முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில், எயில்நாடு என்ற பகுதியை, கங்கரங்கமா என்ற, மகேந்திரனின் ஆளுனரால், ஆட்சி செய்யப்பட்டுள்ளது. அப்போது, அந்துண்டா என்ற இடத்தில் அமைந்துள்ள, ராமதான என்ற கோவிலுக்கு, நிலத்தை தானம் செய்து, எல்லைகளைக் குறித்துள்ளனர்.

இக்கல்வெட்டில், தகடூரில் (இன்றைய தர்மபுரி) உள்ள, கடவுள் மகேசுவரர் பெயரும், குறிப்பிடப்பட்டுள்ளது. எயில்நாடு என்று குறிப்பிட்டுள்ள இடம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, கங்காவரம், காத்தாடிக்குப்பம் மற்றும் பெண்ணேஸ்வரமடம் ஆகிய பகுதிகளைக் கொண்ட, பண்டைய நாட்டு பிரிவாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: