விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே 8ஆம் நூற்றாண்டு கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே 8ஆம் நூற்றாண்டு கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே 8ஆம் நூற்றாண்டு கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே வெட்ட வெளியில் சிதையாமல் நிற்கும் 8-ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிலையை கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராமத்தில் காளி என்றழைக்கப்படும் கொற்றவை சிலையை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். அந்தக் கிராமத்தினர் வழங்கிய தகவலின் பேரில், தொல்லியல் ஆர்வலர்களான பிரியா கிருஷ்ணன், சி.பழனிசாமி, ஏ.கோவிந்தன், ஆய்வு மாணவர் செ.சுபாஷ் ஆகியோர் அண்மையில் கள ஆய்வு செய்து அதை வெளிக்கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தென்னக தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரியா கிருஷ்ணன் கூறியதாவது:

பாசார் பகுதியில் 8- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிலையைக் கண்டறிந்துள்ளோம். இந்தப் பகுதி மக்கள் தெய்வமாக வணங்கிவரும் கொற்றவை பழங்காலத்தில் வேட்டையாடுதலை தொழிலாகக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


கோட்டையில் வீற்றிருக்கும் தெய்வம் துர்கை என்பர். சங்க காலத்தில் எயினர் தமது தொழிலுக்கு வெற்றியைக் கொடுக்கும் பாலை நிலத்தின் தெய்வமாகவே கொற்றவையைக் கருதி வழிபட்டனர். பழந்தமிழ்க் கடவுள் முருகனின் தாயாகவும் கொற்றவை கருதப்பட்டாள்.

சிலப்பதிகாரத்தில் உமை, கொற்றவை என இரண்டு பெண் தெய்வ வடிவங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கருத்த உருவம் கொண்டு இருப்பதால், பிற்காலத்தில் காளி என்றழைத்தனர்.

இதில், கொற்றவையே முதன்மையான தெய்வம். கொற்றவை திருமாலின் தங்கையாகக் கருதுவதால், திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம் முதலியவற்றையும் கொற்றவை தாங்கியிருப்பதாகக் காட்டப்பட்டது. காலப்போக்கில், உமையின் முக்கியத்துவம் அதிகரித்ததுடன், கொற்றவை உமையின் இன்னொரு அம்சம் எனக் கருதப்பட்டு, துர்கையுடன் ஒன்றிணைக்கப்பட்ட நிலையில் தற்போது துர்கை வழிபாடே நடை முறையில் இருந்து வருகிறது.

பாசார் பகுதியில் காணப்பட்ட கொற்றவை சிலை எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர்கால சிற்பமாகும். 6 அடி உயம் கொண்ட இந்த கல் சிலையானது வெட்டவெளியில் மேல் கூரை ஏதும் இல்லாமல் காணப்படுகிறது. அழகிய முகத்துடன் எட்டுக்கரங்களுடன் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அபய கடி முத்திரையுடன், எருமையின் தலை மேல் நின்ற நிலையில் காணப்படுகிறது என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: