பெரியநாயக்கன்பாளையம் அருகே 600 ஆண்டு பழமையான புலிக்குத்திக்கல் கண்டுபிடிப்பு!

பெரியநாயக்கன்பாளையம் அருகே 600 ஆண்டு பழமையான புலிக்குத்திக்கல் கண்டுபிடிப்பு!

பெரியநாயக்கன்பாளையம் அருகே 600 ஆண்டு பழமையான புலிக்குத்திக்கல் கண்டுபிடிப்பு!

பெரியநாயக்கன்பாளையம் அருகே, 600 ஆண்டுகள் பழமையான புலிக்குத்திக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் விவசாய பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்றி, உயிர் துறந்த வீரர்கள் நினைவாக நடுகல் நட்டு வைக்கும் பழக்கம் இருந்தது. இதில், குறிப்பிட்ட விலங்கை, வீரர் ஒருவர் குத்துவது போல கல்லில் செதுக்கி வைத்து, அதை மக்கள் வழிபடுவது வழக்கமாக உள்ளது.பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையம் கிராமத்தில் இதேபோல், ஒரு புலிக்குத்திக்கல்லை மக்கள் வழிபட்டு வருகின்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இது, 600 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது என, கண்டறியப்பட்டுள்ளது. இந்த புலிக்குத்திக் கல்லில் ஒரு ஆண் புலி, ஒரு ஆண் மகன் மீது பாய்வது போலவும், ஆண் ஒருவர் புலியின் வயிற்றில் குத்துவது போலவும், இன்னொரு கையில், அரிவாள் ஒன்றை ஓங்கிய நிலையில் பிடித்து உள்ளது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. அரிசி புடைக்க உதவும் உரல் போன்ற வடிவத்தின் மீது, ஒரு ஆண் நிற்பது போலவும், அதன் அருகே மாடு உரசும் நடுக்கல் ஒன்றும் உள்ளது. இந்த நடுக்கல் மேல், சந்திர, சூரிய வடிவம், ஒரு முழு சூரியன் போலவும், ஒரு அரை பிறை நிலவாகவும் உள்ளது.

இதுகுறித்து, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் தமிழ் மறவான் ரமேஷ் கூறியதாவது:

சாமை அரிசியை கொண்டு, தாகசுரம், பிரமேகம், மகாவாதநோய், சோபாரோகம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்களை குணமாக்கக் கூடிய முறையை பழங்கால தமிழர்கள் அறிந்து இருந்தனர். அதனால் சாமை பயிர்களை, இப்பகுதியில் அதிகமாக பயிரிட்டு வந்தனர். முன்பு இப்பகுதியில், தேவாங்க செட்டியார் அதிகம் வசித்தனர். அவர்கள், சாமையை அதிகளவு பயிரிட்டு வந்தனர். அதனால், இந்த ஊருக்கு சாமைசெட்டிபாளையம் என்ற பெயர் வந்தது.

பின், காலப்போக்கில் சாமை என்பது மருவி சாமிசெட்டிபாளையம் என, உருவானது.இந்த புலிகுத்திக்கல்லை ஆராயும் போது சந்திர, சூரியன் சாட்சியாக விவசாயி ஒருவர் அறுவடை செய்யப்பட்ட சாமை பயிர்களையும், இங்குள்ள ஆடு, மாடுகளையும் காத்து வந்துள்ளார். பணியில் இருந்தபோது ஒரு நாள், மாடு ஒன்று தன் உடலை நடுக்கல்லின் உரசிக் கொண்டு இருக்கும் போது, நீலமலைக் காட்டிலிருந்து வந்த ஆண் புலி ஒன்று, மாட்டை வேட்டையாட வந்துள்ளது. இதைக்கண்ட விவசாயி, சண்டையிட்டு புலியை கொன்றுவிட்டு, இறுதியில் புலி தாக்கியதால், அந்த விவசாயியும் இறந்துள்ளார். அதை நினைவு கூறும் வகையில் மக்களால், புலிக்குத்திக்கல் அமைக்கப்பட்டு, இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறது.

இந்த புலிக்குத்திக்கல்லுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.வீர வரலாறு கூறும் குத்துக்கல்பழங்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சாமை என்ற பயிரை அதிகமாக பயிரிட்டுள்ளனர். அதை உண்ண வரும் புலியை கொன்ற ஆண் மகனும் வாழ்ந்துள்ளார் என்பது இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புலிக்குத்திக்கல் வாயிலாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், சாமநாயக்கன்பாளையம் கிராமத்தில் ஒரு புலிக்குத்திக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.குளம் என்ற சர்க்கார் சாமக்குளம் என்ற பெயரும், சாமை பயிரை அடிப்படையாக கொண்டதாக உள்ளது என, கண்டறியப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: