500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டு ஆத்தூர் அருகே கண்டுப்பிடிப்பு!

500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டு ஆத்தூர் அருகே கண்டுபிடிப்பு!

500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டு ஆத்தூர் அருகே கண்டுபிடிப்பு!

கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் ஆறகழூர் பொன். வெங்கடேசன் இருவரும் காமக்காபாளையத்தில் உள்ள அருணாசலேசுவரர் கோயிலில் ஆய்வு செய்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


கோயிலின் அர்த்த மண்டபத்தில் விநாயகர் மாடத்துக்கு மேல் ஒன்பது வரிகளில் ஒரு கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர். 98 செ.மீ. நீளம் 26 செ.மீ. அகலம் உள்ள இடத்தில் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டின் அருகில் தானம் கொடுத்தவரின் உருவம் புடைப்பு சிற்பமாக உள்ளது. அச்சிற்பத்தின் முகம் மற்றும் கைகள் சிதைக்கப்பட்டுள்ளது. விஜய நகரப் பேரரசின் ஆட்சியின் போது ஆறகழூர் மகதை மண்டலம் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. கி.பி. 1490ம் ஆண்டு தை மாதம் இக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

கல்வெட்டில் உள்ள செய்தி வருமாறு:

காமக்காபாளையம் கிராமத்தில் அப்போது வசித்த செல்லப்பிள்ளை என்பவரின் மகன் நமச்சிவாயம் பிள்ளை என்பவர் தான் சுத்தக்கிரயமாக வாங்கிய 15 குழி நிலத்தை இவ்வூரில் உள்ள அருணாசலேசுவர சுவாமியின் விசேச கட்டளை பூசைக்கு ஆகும் செலவுக்காக தானமாகக் கொடுத்துள்ளார்.

இந்நிலத்தில் வரும் வருவாயைக் கொண்டு இந்த பூஜையை தடையின்றி தொடர்ந்து நடத்தி வர வேண்டும். இந்த தர்மத்தை யாராவது அழிவு செய்தால் அவர்கள் காசியிலே காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் பொதுவாகத் தானத்தை அழிவு செய்பவர்கள் கங்கைக் கரையிலே காரம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் என குறிப்பிடுவார்கள். இக்கல்வெட்டில் காசிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள கிணறும் காசித்தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

15ம் நூற்றாண்டில் நிலங்கள் பெரும்பாலும் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் வாய்மொழியாகவே விற்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் 15 குழி நிலம் சுத்தக்கிரையமாக வாங்கப்பட்டதாக குறிப்பிடுவது சிறப்பான செய்தியாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு அருகே உள்ள விளை நிலத்தில் கி.பி. 1751ம் ஆண்டைச் சேர்ந்த இம்மடி கிருஷ்ணராஜ உடையார் என்ற மைசூர் மன்னரின் கன்னட மொழிக் கல்வெட்டு இதே ஆய்வுக் குழுவினரால் சென்ற ஆண்டு 2016ல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் வழியாக காமக்காபாளையம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் என்பதை அறியலாம். மேலும் இந்த ஊரில் ஆய்வுகள் செய்வதன் மூலம் பல வரலாற்றுத் தகவல்களைப் பெறலாம். இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: