கிருஷ்ணகிரி அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

பர்கூர் அருகே, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, படை வாத்திய கலைஞனுக்கான நடுகல்லை, வரலாற்றுத்துறை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, ஜெகதேவி பாளையத்தில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த படைவாத்திய கலைஞனின் நடுகல்லை, அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: தமிழகத்திலேயே நடுகற்கள் அதிகமாக காணப்படும் மாவட்டங்களில், கிருஷ்ணகிரி மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு நடு கல், புலிக்குத்திப்பட்டான் கல், பன்றிக்குத்திப்பட்டான் கல், யானைக்குத்திப்பட்டான் கல் மற்றும் இசைக் கலைஞர்களுக்கான நினைவுக்கல் ஆகியவை இங்கு காணமுடிகிறது. ஆனால், ஒரு படை வாத்திய கலைஞனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல், 16 அல்லது, 17ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். நடுகல்லில் உள்ள சிற்பம் மிகவும் தெளிவாக செதுக்கப்பட்டுள்ளது. புடைப்பு சிற்பத்தில் உள்ள சிற்பத்தை வைத்து, இது படைவாத்திய கலைஞன், நெற்றிச்சேவகன், முன்னோடி சேவகன் என்று எடுத்துக் கொள்ளலாம்.

நடுகல் சிற்பத்தின் மேல் பகுதியில் சந்திரன், சூரியன் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளன. படைவாத்திய கலைஞன், வலது கையில், வாளை உயர்த்திப் பிடித்துள்ளான். இடது கையில் ஊது கொம்பு அல்லது எக்காளம் தொங்க விட்டுள்ளான். மேலும் வீரனின் தலையில் தலைப்பாகை, காது மற்றும் கழுத்தில் அணிகலன்கள் அணிந்துள்ளான். வீரனின் இடுப்பில் கச்சை கட்டப்பட்டுள்ளது. இடையில் கத்தியும் செருகி உள்ளான். வலது பக்கத்தில் உள்ள பெண்ணின் உருவம் வீரனின் மனைவியாக இருக்கலாம். அப்பெண்ணின் வலது கையில் மதுக்குடுவை உள்ளது. இதன் மூலம் படைவாத்திய கலைஞனின் மனைவியாகிய இப்பெண்ணும், உடன்கட்டை ஏறி உயிர் நீத்துள்ளார் என்ற செய்தியை இக்கல் கூறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ஓட்டப்பிடாரம் அருகே சோழர் கால நடுகல் – சதிகல... ஓட்டப்பிடாரம் அருகே சோழர் கால நடுகல் - சதிகல் கண்டுபிடிப்பு! தூத்துக்குடி மாவட்டம் சங்கம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வில் பிற்கால சோழர் கால நடுகல...
பழநி அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்... பழநி அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு! கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி கிராம அம்மன் கோயிலில் 17ம் நுாற்றாண்டு கல்வெ...
நங்கவள்ளி, ஏற்காட்டில் 17ம்நூற்றாண்டு புலிக்குத்தி... நங்கவள்ளி, ஏற்காட்டில் 17ம்நூற்றாண்டு புலிக்குத்தி கல், முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு! சேலம் மாவட்டத்தின் நங்கவள்ளி, ஏற்காடு பகுதிகளில் வரலாற்று ஆர்...
2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மண் பானை கிருஷ்ணகிரி அ... 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மண் பானை கிருஷ்ணகிரி அருகே கண்டுபிடிப்பு! கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லூரி மாணவர்கள், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மண...
Tags: 
%d bloggers like this: