400 ஆண்டு பழமையான கல்வெட்டு, மூலிகையினால் வரையப்பட்ட ஓவியம் திருச்சி அருகே கண்டுபிடிப்பு!

400 ஆண்டு பழமையான கல்வெட்டு, மூலிகையினால் வரையப்பட்ட ஓவியம் திருச்சி அருகே கண்டுபிடிப்பு!

400 ஆண்டு பழமையான கல்வெட்டு, மூலிகையினால் வரையப்பட்ட ஓவியம் திருச்சி அருகே கண்டுபிடிப்பு!

முசிறி தாலுகா மண்பறை கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள், மூலிகையினால் வரையப்பட்ட ஓவியங்கள் ஆகியவை கல்வெட்டு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள மண்பறை கிராமத்தில் அங்காளம்மன், அய்யனார், சப்த கன்னியர், ஆதிமூர்த்தீஸ்வரர் உடனுறை ஆனந்தவள்ளி கோயில்கள் அமைந்துள்ளது. இங்கு ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் மற்றும் மேலாண்மையியல் துறை ஆய்வாளர் பாபு என்பவர் கூறியதாவது: இக்கோயில்கள் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயில்களாகவும், நாயக்கர்கள் பராமரிப்பில் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் எல்லையம்மன் கோயிலில் சிதைந்த நிலையில் கால்கள் மட்டும் தெரியும் மூலிகைகளால் சுவற்றில் வரையப்பட்ட ஓவியத்தின் ஒரு பகுதியும் கண்டறியப்பட்டுள்ளது.


உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும்


அங்குள்ள கல்வெட்டு ஒன்றில் சாலிய வாகன சகாப்த ஆண்டில் கட்டப்பட்டது என்றும், அப்பகுதியில் வாழ்ந்த தளி அம்பலவாயி என்ற பெண் கோயிலுக்கு அளித்த நிலதானங்கள், பூஜை முறைகள் குறித்தும் உள்ளது. 17ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. சிவன் கோயிலில் இரண்டு நந்தி, இரண்டு பலிபீடங்கள் உள்ளது வழக்கத்திற்கு மாறாக இருப்பது ஆய்வுக்கு உரியதாகும். நாயக்கர் காலத்தில் ஆதிமூர்த்தீஸ்வரர் உடனுறை ஆனந்தவள்ளி திருக்கோயில் பல்வேறு உற்சவங்களுடன் பக்தர்கள் கொண்டாடிய திருக்கோயிலாக இருந்திருக்கும். இங்கு ஜோஷ்டாதேவி சிலை, சப்த கன்னியர் சிலை, குதிரை வீரன் சிலை, நாயக்க மன்னர் மற்றும் அரசியின் சிலை ஆகியவை தொன்மை வாய்ந்தது. நாயக்க மன்னர்களின் வழித்தோன்றல்கள் இப்பகுதியில் வாழ்ந்திருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுகிறது என்று கூறினார். தற்போது, கோயில் சிதிலமடைந்து முட்புதர்கள் வளர்ந்து அழிவின் விளிம்பில் உள்ளது.

  • தினகரன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: