திண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு!

திண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு!

திண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் மலைக்கோட்டையில் கி.மு.3 ம் நுாற்றாண்டை சேர்ந்த 24 சமணப் படுக்கைகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவன மாணவர்கள் ஜெரால்டு மில்லர், ஞானபாலன், ஜான்சன், செல்வராஜ், அருண் ஆகியோர் மலைக்கோட்டையில் ஆய்வு நடத்தினர். கோட்டையின் தென்மேற்கில் இருந்த குகையில் 20 கல் படுக்கைகளும், சில படுக்கைகளில் தலையணை அமைப்பும், மலையில் இருந்து வேடிக்கை பார்க்க வசதியாக 4 அமரும் படுக்கைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குகையின் உள்ளே, மேற்பரப்பில் ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி மற்றும் பெயர் தெரியாத விளையாட்டுகளும் கட்டங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. சமண படுக்கைகளில் திரிசூலம் மழைக் காலத்தில் குகையினுள் தண்ணீர் புகாமல் இருக்க பாறையில் கல் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் செழித்து வளர்ந்த சமணம் கி.பி.7 மற்றும் 8 ம் நுாற்றாண்டில் சைவ, வைணவ எழுச்சியால் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. திண்டுக்கல் மலைக்கோட்டை தேவார வைப்பு தலமாக விளங்கியதை உறுதிப்படுத்த, சைவம் வெற்றி பெற்றதை குறிக்க சமணர் படுக்கைகளின் மீது 2 திரிசூலத்துடன் கூடிய உடுக்கை, ஒரு திரிசூல உடுக்கை கோட்டுருவில் இருப்பது போன்ற சைவ குறியீடுகள் வரையப்பட்டுள்ளது.சமணப் படுக்கைகள் நாட்டின் பாரம்பரிய சின்னங்கள். அரசும், தொல்லியல் துறையும் இதை பாதுகாக்க வேண்டும். மக்கள் பார்க்க வசதியாக மலையில் படிப்பாதை அமைக்க வேண்டும், என தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறினார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் சிதறால் குகைக் கோ... கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் சிதறால் குகைக் கோயில்! தமிழகத்தின் பாரம்பரியத்தை, கலாசாரத்தைப் பறைசாற்றும் பல கோயில்களும், வரலாற்றுச் சின்னங்களும் ...
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி அறிக்கைகளை இணையதளத்தில்... ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து உருவாக்க...
பழந்தமிழரின் உயர்ந்த வாழ்க்கை!... பழந்தமிழரின் உயர்ந்த வாழ்க்கை! பத்துப்பாட்டு பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டும் காலப் பெட்டகமாகத் திகழ்கிறது. இதில் பல்வேறு ...
தொண்டி சமண பள்ளி பாரம்பரிய சின்னமாகுமா ஒன்பதாம் நூ... தொண்டி சமண பள்ளி பாரம்பரிய சின்னமாகுமா ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ! 'ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, சுந்தரபாண்டியன் பட்டினத்தில் உள்ள, ஒன்பதா...
Tags: