பழநி அருகே 350 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

பழநி அருகே 350 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

பழநி அருகே 350 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

பழநி அருகே, கோதைமங்கலம் கிராமத்தில், முருகக் கடவுளை வாழ்த்தும் காவடிப்பாட்டுகள் அடங்கிய, 300 ஆண்டுகள் பழமையான, ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, 10ம் வகுப்பு மாணவி, யுவராணி, தன் வீட்டில் பழமையான ஓலைச்சுவடிகள் உள்ளதாக, வரலாற்று ஆசிரியர், ராஜேஸ்வரி, வரலாற்று ஆய்வாளர் தமிழாசிரியர் நந்திவர்மன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள், ஓலைச்சுவடியை ஆய்வு செய்தபோது, 300 ஆண்டுகளுக்கு முந்தையது என, தெரியவந்துள்ளது.

அதில், இரண்டு பக்கங்களிலும் பழநி மலை முருகனை பற்றி, காவடிசிந்தாக, 100 பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.இது குறித்து ஆய்வாளர் நந்திவர்மன் கூறியதாவது:தங்களது தாத்தா காலத்தில் இருந்து வீட்டில் ஓலைச்சுவடிகள் உள்ளதாக மாணவி தெரிவித்தார். அதை ஆராய்ந்தபோது, ஓர் அடி நீளமும், 4 செ.மீ., அகலம் கொண்டதாக உள்ளது. 50 சுவடிகளில் பழநி மலை முருகன் மேல், ‘காவடிச்சிந்தாக பாடல் எழுதப்பட்டுள்ளது.

பாடல்கள் எளிய நடையில், முருகனின் வாழ்க்கை வரலாறு, காவடி எடுப்பதால் ஏற்படும் நன்மைகள், மனிதனுக்கு உண்டாகும் நோய்கள் பற்றியும், அந்த நோய்கள் காவடி எடுப்பதால் தீரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.பழநி மட்டுமின்றி திருச்செந்துார் முருகன் குறித்தும், 10 பாடல்கள் உள்ளன. ஓலைச்சுவடி இணைப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ள பட்டன், ஆங்கிலேயர் காலத்து மன்னரின் புகைப்படம் அழிந்த நிலையில் உள்ள நாணயம் போல உள்ளது.

சந்தம், எழுத்து அமைப்பு, ஓலைச்சுவடியின் பழமை கொண்டு ஆராய்ந்ததில் 350 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வாய்ப்புள்ளது. ஓலைச்சுவடி பாடல்களை நுாலாக வெளியிட்ட பின், பழநி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

பொன்னாக்காணியில் தூரி கல்வெட்டு கண்டுபிடிப்பு!... பொன்னாக்காணியில் தூரி கல்வெட்டு கண்டுபிடிப்பு! பொள்ளாச்சி அருகே பழமை வாய்ந்த துாரிக்கல் கல்வெட்டுமற்றும் சதிக்கல் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறி...
சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கா... சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு! சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் சேலம் மா...
திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த ... திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு! திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி அரசு கலைக் க...
400 ஆண்டு பழமையான கல்வெட்டு, மூலிகையினால் வரையப்பட... 400 ஆண்டு பழமையான கல்வெட்டு, மூலிகையினால் வரையப்பட்ட ஓவியம் திருச்சி அருகே கண்டுபிடிப்பு! முசிறி தாலுகா மண்பறை கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு ம...
Tags: