300 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

300 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

300 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பழநி அருகே, திருஆவினன்குடிகோவில், பங்குனிஉத்திர கல்யாண மண்டபத்தில், 300 ஆண்டுகள் பழமையான இயந்திர கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.திண்டுக்கல் மாவட்டம்,பழநி, திருஆவினன்குடி கோவில் அருகே, 24 மனை சாந்தகுல சவுமிய நாராயண கவர நாயக்கமார் பொது மண்டபம் உள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும் இம்மண்டபத்தில், மராமத்து பணிகள் நடக்கிறது.ஒரு துாணில் உள்ள, கல்வெட்டு குறித்து, தொல்லியல் ஆய்வாளர், நாராயணமூர்த்தி உள்ளிட்ட குழுவினர், ஆய்வு செய்தனர். அது, 300 ஆண்டுகள் பழமையான இயந்திரக் கல்வெட்டு என, தெரியவந்துள்ளது.

நாராயண மூர்த்தி கூறியதாவது: கல்வெட்டில், தமிழ் எண்கள், ஒன்பது சதுர கட்டங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள எண்களை எப்படி கூட்டினாலும், 15 வருகிறது. தற்கால ‘சுடோகு’ விளையாட்டு போல இருந்தாலும், 15ல் ஒன்றையும், ஐந்தையும் கூட்டினால், முருகனின் இயந்திரஎண், 6 என்பதை, குறிப்பிடுகிறது. பங்குனி உத்திரவிழாவின், 6ம் நாள், திருக்கல்யாணம் என்பதை குறிப்பிடும்படி உள்ளது சிறப்பாகும். மண்டப துாண்களில், மன்னர்களின் நாட்டிய பெண்களின் சிற்பங்கள், புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. இது, கி.பி.,13 முதல் கி.பி.,18ம் நுாற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: